சகல நல்ல விஷயங்களையும் ஈர்க்கக்கூடிய காந்தமாக நாம் மாற வேண்டும் என்றால், நமக்குள் இருக்கும் வசிய தன்மையை அதிகரிக்க வேண்டும். நல்லதை ஈர்க்கக்கூடிய விஷயத்தை தான் வசியம் என்று சொல்லுவார்கள். நல்ல மனிதர்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும், நல்ல விஷயங்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும், சொத்து சுகங்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும், காசு பணத்தை நம் பக்கம் ஈர்க்க வேண்டும் என்றால், நமக்கு என்ன தேவை.
வசிய தன்மை தேவை. சகல விஷயங்களையும் வசியப்படுத்தி நம் பக்கம் ஈர்க்க செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தையும் மந்திர ஜபத்தையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
சகல நல்ல விஷயங்களையும் வசியம் செய்யும் மந்திரம்
இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் உச்சரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, உங்களை நீங்களே அலங்காரம் செய்து கொள்ளுங்கள். கண்ணாடியில் உங்களை பார்த்தால் உங்களுக்கே பிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு அழகு இருக்க வேண்டும். அதாவது ஆபரணம் அணிகலன், புது ஆடை இதையெல்லாம் தேவையில்லை.
சுத்தமான குளித்தவுடன், பெண்களாக இருந்தால் தலை சீவி நெத்திக்கு பொட்டு இட்டு, கொஞ்சமாக பூ வைத்து, உங்களுக்கு சௌகரியமான சுடிதார் புடவை ஏதாவது ஒரு ஆடையை அணிந்து கொண்டு, இந்த மந்திரத்தை சொல்லலாம். ஆண்களாக இருந்தால் குளித்து முடித்துவிட்டு, தலை சீவி நெற்றிக்கு திருநீறு வைத்துக் கொண்டு பேண்ட் சட்டை அல்லது வேட்டி சட்டை அணிந்து கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். (நைட்டி லுங்கி போன்ற ஆடைகளை அணிந்து இந்த மந்திரத்தை சொல்வதை தவிர்க்கவும்.)
நம்மை பார்க்கும்போது நமக்கே ஒரு நம்பிக்கை வர வேண்டும். அதற்காகத்தான் நம்முடைய புறத்தோற்றமும் அழகாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல நம்முடைய அகசுத்தமும் முக்கியம். நம்முடைய மனசு சுத்தமாக இருக்க வேண்டும். இம்மந்திரத்தை உச்சரித்துவிட்டு அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்க கூடாது. பொறாமை குணத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டக்கூடாது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் தயாராகி கண்ணாடி முன்பு நின்று உங்களை நீங்களே பார்த்தவாறு, உங்கள் நெற்றி பொட்டை நீங்களே பார்த்தவாறு பின் சொல்லக்கூடிய இந்த வசிய மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். ‘வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி’ இதுதான் நீங்கள் சொல்ல வேண்டிய வசிய மந்திரம்.
தொடர்ந்து 48 நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை கண்ணாடி முன்பு நின்று உங்களை நீங்களே பார்த்துக் கொண்டு சொன்னால், 48 நாட்களில் நீங்கள் நினைத்த நல்ல விஷயத்தை எல்லாம் வசியம் செய்து விடலாம். அப்படி என்றால், நல்ல வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு, நீங்கள் நினைத்த வேலை கிடைக்கும்.
தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள், அதில் வெற்றியை சீக்கிரமாக அடையலாம். வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அந்த கனவு நினைவாகும். இப்படி நீங்கள் எந்த நல்ல விஷயத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நல்ல விஷயம் தானாக உங்களைத் தேடி வரத் தொடங்கிவிடும்.
நல்ல விஷயங்களும், நாம் நினைத்த விஷயங்களும் தொடர்ந்து நமக்கு வசியம் ஆகும் போது, அதோடு சேர்ந்து பண வசியமும் ஏற்படும். வெற்றி நாம் வசியம் செய்து விட்டால், பிறகு பணம் நம்மை விட்டு பிரிந்து போவதற்கு வாய்ப்பே கிடையாது. பணத்தையும் தானாக ஈர்க்கூடிய வித்தையை நாம் கற்றுக் கொள்ளலாம். வெறும் மந்திரத்தை மட்டும் சொல்லிவிட்டு, முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்க கூடாது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ பரிகாரம்
உங்களுடைய உழைப்போடு இந்த மந்திரம் சேரும்போது உங்களுடைய முயற்சியில் பலன், பல ஆயிரம் மடங்கு பெருசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முயற்சி இல்லாமல் வெறும் மந்திரத்தை மட்டும் சொன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த மந்திரம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.