- Advertisement -

கடன் மற்றும் பணப் பிரச்சனை தீர பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் என்ற ஒன்று இருக்கும். அந்த காரணத்தின் அடிப்படையிலேயே தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை சந்தோஷமாக இருந்தாலும் சரி கஷ்டங்களாக இருந்தாலும் சரி. அந்த வகையில் நமக்கு ஏற்படக்கூடிய கடன் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய ஒரு பரிகாரத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் மற்றும் பணப் பிரச்சனை தீர பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் தாராளமாக இருந்தால் அவருக்கு பல பிரச்சினைகள் வராமல் இருக்கும். பணமே பிரச்சினையாக இருந்தால் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அனைத்துமே பிரச்சினையாக தான் இருக்கும். பணப்பிரச்சினை ஏற்பட்ட உடனேயே நமக்கு வரக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்னவென்றால் அது கடன் பிரச்சினை தான். அந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பணத்தை கூட நம்மால் பெற முடியவில்லை என்னும் பட்சத்தில் நம்மால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு சென்று விடுவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய் பகவானுக்கு தான் செய்யப் போகிறோம். அதனால் செவ்வாய் பகவானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். வழிபாடு செய்து முடித்த பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு ஒரு மட்டை தேங்காயை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

இந்த தேங்காயை விநாயகருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது யாரும் பார்க்கக்கூடாது. யாரும் பார்க்காத நேரத்தில் தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். கையில் கருங்காலி குச்சி அல்லது தேக்கு பூச்சியை வைத்து வீட்டில் விளக்கேற்றி வைத்திருந்தோம் அல்லவா அந்த தீபத்தில் இந்த குச்சியை காட்டி எரிக்க வேண்டும். அது எரிய ஆரம்பித்ததும் தண்ணீரில் நனைத்து விடுங்கள். இப்பொழுது எரிந்த பகுதி கரியாக மாறியிருக்கும்.

- Advertisement -

அந்த கரியை வைத்து தெற்கில் இருந்து வடக்காக மூன்று கோடுகளை போட வேண்டும். அது சிறிய கோடுகளாக இருந்தால் கூட பரவாயில்லை. இப்படி போட்டுவிட்டு உங்களுடைய இடது காலால் அந்த கோடுகளை ஒவ்வொன்றாக அழிக்க வேண்டும். அப்படி அழிக்கும் பொழுது செவ்வாய் பகவானுக்குரிய மந்திரத்தை உச்சரித்த வண்ணம் அழிக்க வேண்டும்.

மந்திரம்

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ தபம்ருத்யவ:
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
துக்கதௌர்பாக்யநாசாய ஸக ஸந்தான ஹேதவே
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்

இதையும் படிக்கலாமே: விரும்பிய வேலை கிடைக்க வேலவன் வழிபாடு
இந்த முறையில் நாம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பரிகாரம் செய்து வர விநாயகப் பெருமாள், முருகப்பெருமான், செவ்வாய் பகவான் போன்ற மூவரின் அருளால் நம்முடைய கடன் பிரச்சனைகள் முற்றிலும் தீருவதோடு பணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, நல்ல பண வரவை பெற்று நலமுடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -