- Advertisement -

கடன் தீர்க்கும் ஆஞ்சநேயர் செந்தூரம்

- Advertisement -

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றும், மீண்டும் மீண்டும் கடன் வாங்காத சூழ்நிலை உண்டாக வேண்டும் என்றும் எவ்வளவோ பரிகாரங்களை, எவ்வளவோ பணம் கொடுத்து செய்கின்றோம். அது எல்லாம் எதுவுமே எங்களுக்கு வேலை செய்யவில்லை, கடனும் அப்படியேதான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும், வந்து கொண்டு தான் இருக்கிறது.

வருமானத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எங்களுக்கு செலவே இல்லாமல் சுலபமான பரிகாரம் தேவை. அதே சமயம் அது சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் இருக்க வேண்டும் என்றால், 10 ரூபாய் செலவு செய்து இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் கடன் இல்லாத மனிதராக மாறலாம்.

- Advertisement -

கடன் தீர ஹனுமன் செந்தூரம்

உங்க வீட்டு பக்கத்தில் ஏதாவது பிரசித்தி பெற்ற ஹனுமன் கோவில் இருக்கிறது. அந்த இடத்திற்கு உங்களால் போக முடியும் என்றால், சனிக்கிழமை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் அந்த கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம். இப்படி பிரபல்யமான கோவிலுக்கு எல்லாம் செல்ல முடியாது என்றால், வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு சென்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு உள்ளவர்கள் கட்டாயம் பிரசித்தி பெற்ற ஹனுமன் கோவிலுக்கு செல்லுங்கள்.

உதாரணத்திற்கு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், இவர்களெல்லாம் அதிசக்தி வாய்ந்த ஆஞ்சநேயர்கள். இவர்களை எல்லாம் வழிபாடு செய்து வேண்டுதல் வைத்தால் வேண்டுதலானது வீடு திரும்புவதற்குள் பலித்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 10 ரூபாய்க்கு செந்தூரம் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த செந்தூரத்தை வாங்கிக் கொண்டு போய், அனுமன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அந்த செந்தூரத்தை மீண்டும் கேட்டு நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள். இதைக் கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் வைத்து விட வேண்டும். பூஜை அறையில் வைக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு இந்த செந்தூரத்தை நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடி அந்த ஹனுமனை உங்கள் மனக்கண்களால் காண வேண்டும். கண்களை மூடிய பிறகு உங்கள் கண்களுக்குள் அந்த ஹனுமன் தெரிய வேண்டும்.

அந்த அளவுக்கு ஆழ்மனதில் அனுமனை நினைத்து என்னுடைய கடனை, நான் நிச்சயம் சீக்கிரம் அடைப்பேன். சீக்கிரம் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வேன். நிறைய பணம் சம்பாதிப்பேன் என்று மனதார நினைத்து இந்த செந்தூரத்தை உங்கள் நெற்றியில் வைத்துக்கொண்டு அன்றாட வேலையை துவங்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் மனக் கண்களில் காணக்கூடிய ஹனுமன் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனதிற்குள்ளேவே குடியேறி விடுவார். ஹனுமன் மாதிரி பலம் வந்து விட்டால், வேறு என்ன வேண்டும். துணிச்சலும் தைரியமும் நம்மிடத்தில் இருந்தால் எதை வேண்டும் என்றாலும் சாதிக்கலாம். ராமாயணத்தில், ஹனுமன் ராமருக்கு செய்த சேவையையும், அனுமன் ராமன் மீது வைத்த நம்பிக்கையையும், மீண்டும் மீண்டும் நினைத்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: நில பிரச்சனை தீர்க்கும் கோவில்

நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற துணிச்சல் நம்க்குள் தானாக வந்துவிடும். பிறகு கடனை அடைப்பது சுலபம். இப்படி இந்த செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வரும்போது 48 நாட்களுக்குள் உங்கள் வாழ்க்கையில் வித்தியாசம் நிச்சயம் தெரியும். கடன் சுமை அடைவதையும் கண்கூடாக பார்க்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -