- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநில பிரச்சனை தீர்க்கும் கோவில்

நில பிரச்சனை தீர்க்கும் கோவில்

- Advertisement -

நம் இந்து சமயத்தில் ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு பலன்கள் கிடைக்கக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளன. பழமை வாய்ந்த கோவில்கள் பலவும் பல்வேறு பிரச்சனைகளை உடனே தீர்த்து தரும் அற்புத சக்தி படைத்ததாக இருக்கும். அந்த வகையில் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரவும், சொந்த வீடு, நிலம் வாங்கவும், வீடு கட்டி குடியேறவும் செல்ல வேண்டிய கோவில் எந்த கோவில்? என்னும் தகவல்களைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்னும் பழமொழிக்கு ஏற்ப, காசு இருக்கும் பொழுதே நாம் நிலத்தை வாங்கி வைத்து விடுகிறோம், ஆனால் நிலம் வாங்குவதற்கு உரிய நேரம் உங்களுக்கு வரவில்லை என்றால், அந்த நிலம் உங்களிடம் தங்குவது கிடையாது. அதை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். விற்க நினைத்தால் விற்கவும் முடியாமல் தவிப்போம்.

- Advertisement -

வாங்கிய நிலத்தில் அடுத்தவர் வந்து அமர்ந்து கொண்டு பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இது போன்ற சிக்கல்களில் சிக்கி தவிப்பவர்கள், இந்த கோவிலுக்கு சென்றால், உடனே நல்ல தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 108 திவ்ய பிரதேசங்களில் 63 வது ஸ்தலமாக இடம் பெற்றுள்ள இந்த தலத்தின் பெயர் ஸ்தல சயன பெருமாள் கோவில் ஆகும்.

பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மீது தான் படுத்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்த ஸ்தலத்தில் தரையோடு தரையாக பூமியில் அப்படியே படுத்துக் கொண்டிருக்கும் படியான காட்சியை கண் குளிர தரிசிக்கலாம். இங்கு தாயார் நில மங்கையாக இருக்கிறார். ஆதிசேஷனை விட்டுவிட்டு பக்தர் ஒருவருக்காக நிலத்தில் வந்து பூமியோடு பூமியாக சயனம் கொண்டிருப்பதால் இவருக்கு இப்பெயர் வந்துள்ளது.

- Advertisement -

இந்த கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாபலிபுரத்தில் எழுந்தருளி உள்ளது. சரியாக மகாபலிபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் அமைய பெற்றுள்ளது இக்கோவில். 14 ஆம் நூற்றாண்டில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர மன்னர் காலத்தில் பராங்குசண் என்னும் மன்னரால் புணரமைக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு முன்பே ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளிலேயே கடலுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது. இக்கோயிலில் மூலவர் மிகவும் எளிமையாக வேறு எங்கும் காண முடியாத படி சயனம் கொண்டிருக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்பது அங்கு வரும் பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே:
சஷ்டி விரதம் முடிந்த பின் கடைபிடிக்க வேண்டியவை

திருமண தடைகளை நீக்கவும், குழந்தை பேறு உண்டாகவும், நிலம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகள் தீர்ந்து போகவும் இக்கோவிலுக்கு பக்தர்கள் நம்பிக்கையுடன் வருகை தருகின்றனர். 12 ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் கோவிலில் இடம் பெற்றுள்ளன. முன்வினை பாவங்கள், சாபங்கள் தீருவதற்கும் இக்கோவிலில் வழிபாடு மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய இந்த பெருமாள், நம்மை கூப்பிடும் படி நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றார். நில தகராறு, நிலபிரச்சனைகள், சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற கனவுகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள். உங்களின் அத்தனை துயர்களும் நீங்கி விரைவிலேயே உங்கள் கனவுகள் நிறைவேறும்.

சற்று முன்