- Advertisement -

கடனை வாங்குவதற்கும், கடனை சீக்கிரமாகவே திருப்பி அடைப்பதற்கும் உகந்த நாட்கள் என்னென்ன? குறிப்பா இந்த நாளில் கடன் வாங்கினா, திருப்பித்தர ரொம்பவே கஷ்டப்படுவாங்க!

கடன் வாங்குவதற்கு முன்பாகவே ஒன்றுக்கு பலமுறை யோசித்து, வாங்கிய கடனை திருப்பி தர முடியும் என்ற பட்சத்தில், கடன் வாங்க வேண்டும். அனாவசியமான, ஆடம்பர செலவுக்கு கடன் வாங்கக்கூடாது. அவசியமான தேவை என்றால் மட்டும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே, வேறு வழி இல்லை என்றால், கடன் வாங்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் கடன் என்ற மூன்று எழுத்து, வாழ்க்கை என்ற நான்கெழுத்தை அழித்து, சந்தோஷம் என்ற ஐந்தெழுத்தை நம்மால் கடைசிவரை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும்.

நிறைய பேர் அவசரத் தேவைக்காக நாள் கிழமை எதையுமே பார்க்காமல் கடன் தொகையை வாங்கி விடுவார்கள். பின்பு எதிர்காலத்தில், அந்த கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல், அசல் தொகையையும் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவார்கள். இனி நீங்கள் கடன் வாங்கினால் எந்த நாட்களில் வாங்க வேண்டும்? எந்த நாட்களில் வாங்க கூடாது. என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அமாவாசை தினத்தன்றும், அஷ்டமி திதி அன்றும் கட்டாயமாக கடன் வாங்கவே கூடாது. எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலை உங்களுக்கு இருந்தாலும் இந்த இரண்டு நாட்களில் ஒரு ரூபாயைக் கூட அடுத்தவர்களிடம் இருந்து கடன் தொகையாக வாங்காதீர்கள்.

நீங்கள் கடன் வாங்க செல்வதாக இருந்தால், முடிந்தவரை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் கடன் வாங்காமல் இருப்பது மிக மிக நல்லது. மூலம், ஆயில்யம், கார்த்திகை, மகம், பூரம், சித்திரை விசாகம், இந்த நட்சத்திரங்களில் கடன் வாங்கினால், பின்பு திருப்பிக் கொடுப்பதில் அதிகப்படியான சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அமாவாசை அஷ்டமி திதி அல்லாமல், மேல் குறிப்பிட்டுள்ள நட்சத்திரங்களும் அல்லாமல், வரக்கூடிய திங்கட்கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக்கிழமை, இந்த மூன்று தினங்களில் கடன் வாங்கலாம்.

- Advertisement -

நீங்கள் கடன் கொடுப்பவர்களாக இருந்தால், திருவாதிரை, ஆயில்யம், பூராடம், பரணி, சுவாதி, மகம், சித்திரை, விசாகம், கேட்டை, பூரட்டாதி, நட்சத்திரங்களில் கடன் கொடுக்கக்கூடாது. இந்த நாள் நட்சத்திரங்களை, கடன் கொடுப்பதையே தொழிலாக செய்யும், வட்டி கடை வைத்திருப்பவர்கள் பார்த்தால் அவர்களால் தொழில் செய்யவே முடியாதே! என்ற சந்தேகம் கட்டாயம் நம்முடைய மனதில் எழத்தான் செய்யும்.

கடன் கொடுப்பவர்களுக்கு, கடன் கொடுப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சூட்சமங்கள் எல்லாமே தெரிந்திருக்கும். அவர்கள், தொழில் செய்வதற்கென்று தனியாக ஒரு தொகையை முதலீடு செய்து வைத்திருப்பார்கள். அந்த தொகையில் இருந்ததுதான், கடன் கேட்டு வருபவர்களுக்கு கடன் தொகையை கொடுப்பார்களே தவிர, அவர்களுடைய வீட்டின் பீரோவில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பணத்தைக் கொண்டுவந்து கொடுக்க மாட்டார்கள்.

- Advertisement -

தொழில் செய்யும் இடத்தில், கடன் கொடுப்பதற்காக, தேவையான அளவு பணத்தை நாள் கிழமை பார்த்து, முன்கூட்டியே எடுத்து ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அந்தப் பணத்தை எடுத்து தான் கடன் கேட்டு வருபவர்களுக்கு, கடன் தொகையாக, பணத்தை கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் வாங்கிய கடனை விரைவாக திருப்பி தர வேண்டுமென்றால், செவ்வாய் கிழமைகளில் மதியம் 12 மணிக்கு முன்பாகவே கடன் தொகையை திருப்பித் தர வேண்டும். அதாவது, கடனை விரைவாக திருப்பித் தரவேண்டும் என்று, ஒரு உண்டியலை, நீங்களே உங்களுடைய வீட்டில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு முன்பாக ஒரு சிறு தொகையை அந்த உண்டியலில், கடனை தீர்க்க வேண்டும் என்பதற்காக போட்டுக் கொண்டே வாருங்கள்.

இப்படி செய்து வரும் பட்சத்தில், உங்களது கடன் தொகையை சீக்கிரமே திருப்பித் தருவதற்கு விடிவு காலம் பிறக்கும். உதாரணத்திற்கு, 10,000 ரூபாய் கடன் இருந்தால், உண்டியலில் பணம் சேர்த்து அதை திருப்பிக் கொடுத்துவிடலாம். லட்சக் கணக்கில் கடன் வாங்கியவர்கள், உண்டியலில் பணம் சேர்த்து திருப்பி கொடுக்க முடியாது. ஆனால், அதற்கான வட்டி காசை இப்படி சேமித்து, அந்தப் பணத்தை எடுத்து வட்டியை கட்டி வந்தால் கூட, அசல் தொகையை விரைவாக செலுத்துவதற்கு சீக்கிரமே விடிவு காலம் பிறக்கும்.

நீங்கள் கடனாக வாங்கிய தொகையை மொத்தமாக திருப்பி அடைப்பதாக இருந்தாலும் அல்லது சிறு சிறு தொகையாக திருப்பி அடைப்பதாக இருந்தாலும் செவ்வாய் கிழமை அன்று, திருப்பிக் கொடுக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், தினம்தோறும் செவ்வாய் ஹோரை வரும். ஹோரை அட்டவணையில், இருக்கும் செவ்வாய் ஹோரையை பார்த்து அந்த நேரத்தில் கடனை திருப்பித் தந்தால் கடன் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
அநியாயமாக பணம் வாங்குபவர்களும், வயிற்றெரிச்சல் உடன் அந்த பணத்தை கொடுப்பவர்களும் என்ன அனுபவிக்கிறார்கள் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -