- Advertisement -
சமையல் குறிப்புகள்

மொறு மொறு காராசேவ் செய்வது எப்படி

காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு உட்கொண்டாலும் மாலை வேளைகளில் ஏதேனும் ஒரு வகையான சிற்றுண்டி அல்லது நொறுக்குத்தீனி உட்கொள்ள நம் அனைவருக்குமே ஒரு விருப்பம் உண்டாகிறது. அப்படி மாலை வேளைகளில் உட்கொள்வதற்கான ஒரு அருமையான சிற்றுண்டி “காராசேவ்”. இங்கு சுவையான காராசேவ் செய்யும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

காராசேவ் செய்ய தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2 கோப்பை
அரிசி மாவு – 1/2 கோப்பை
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு – 10 முதல் 15 வரை
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பட்டை – சிறிதளவு
கிராம்பு – 2
கசகசா – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 1 பல்

- Advertisement -

சாப்பிடக்கூடிய நபர்களின் எண்ணிக்கை : 3
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்

செய்முறை

- Advertisement -

கடலை மாவு, அரிசி மாவு, மற்றும் மிளகாய் தூள் போன்றவற்றை ஒன்றாக கலந்து ஒரு சல்லடையில் போட்டு நன்கு சலித்து கொள்ள வேண்டும்.

பின்பு இந்த மாவு கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பெருங்காயம் மற்றும் உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். மிளகுகளை முழுதாகவோ அல்லது உடைத்தோ இக்கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

கிராம்பு, பட்டை, கசகசா, பூண்டு போன்றவற்றை விழுது போல் நன்கு அரைத்து இந்த மாவு கலவையுடன் சேர்த்து கொள்ளவும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையில் நீர் சேர்த்து, முறுக்கு செய்யும் மாவு பதத்தில் பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் நெருப்பு மூட்டி அதில் ஒரு கடாயை வைத்து, அதில் தேவைக்கேற்ற அளவில் எண்ணெய் விட்டு காய வைத்து கொள்ளவேண்டும்.

பின்பு காராசேவ் செய்வதற்கென்று பிரத்தியோகமாக செய்யப்பட்ட கரண்டியிலோ, அல்லது காய்கறி துருவும் உபகாரணத்தில் சற்று பெரிய துளைகளில் மாவை உருண்டை பிடித்து தேய்க்க, மாவு துண்டுகள் நீள நீளமாக எண்ணையில் விழும்.

இதன் பிறகு அந்த சேவு துண்டுகளை எண்ணையில் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க சுவையான காராசேவ் தயார்.

இதையும் படிக்கலாமே:
சுவையான தக்காளி சாதம் வெறும் 30 நிமிடத்தில் செய்வது எப்படி

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் மாற்று பல்வேறு தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Karasev recipe in Tamil. it can also be called as Karasev seivathu eppadi in Tamil or Kara sev seimurai in Tamil. This Kara sev recipe in Tamil is very useful to have snacks in the evening.

- Advertisement -