
விரதங்களில் முக்கியமான விரோதமாகவும் கடினமான விரதமாகவும் கருதக்கூடியது தான் இந்த கந்த சஷ்டி விரதம். கந்தனை நினைத்து மனதார அவனை வழிபட்டு இருக்கக்கூடிய இந்த விரதம் எத்தனை கடினமானதாக இருக்கிறதோ அத்தனை பலனை அளிப்பதாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. ஆகையால் தான் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் இந்த கந்தசஷ்டி விரதத்தை முறையாக கடைபிடித்து முருகனின் அருளை பெறுகிறார்கள் இதில் எந்த ஐயமும் இல்லை.
அப்படியான இந்த காலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதியும் விசேஷமானது தான். அப்படியாக இந்த சஷ்டி விரத காலத்தில் வரக்கூடிய சதுர்த்தி திதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் வரக்கூடிய இந்த சதுர்த்தி திதியில் நாம் விநாயகரை முறையாக வழிபட்டால் பலனை பல மடங்கு அதிகமாக பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சதுர்த்தி ரீதியானது செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. இது மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது முதலாவதாக கந்த சஷ்டி விரதம் இருக்கக் கூடிய காலத்தில் வருகிறது. அது மட்டும் இன்றி முருகருக்கு உகந்த செவ்வாய் கிழமையில் வருகிறது இதனை சிறப்பு வாய்ந்த இந்த சதுர்த்தி திதியில் நாம் விநாயகரை எப்படி வழிபட்டு முழு பலனை பெறலாம் என்பதை பார்க்கலாம்.
இந்த வழிபாடு செய்ய காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டில் தீபம் ஏற்றி வைக்க விட வேண்டும். அடுத்து விநாயகர் படம் சிலை எது இருந்தாலும் எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர்கள் சூடி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். விநாயகருக்கு செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்வதும் செம்பருத்தி மலரை சூட்டுவதும் சிறப்பு வாய்ந்தது முடிந்தால் செம்பருத்தி மலரை வைத்து வழிபாடு செய்யுங்கள்.
இத்துடன் அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும் மாலையாக சூட்ட முடியாதவர்கள் கொஞ்சம் அருகம்புல்லையாவது வையுங்கள் இது மிக மிக முக்கியம். அதே போல் விநாயகருக்கு நெய்வேத்தியமாக எளிமையான ஏதேனும் ஒரு இனிப்பு வகையை செய்து கொள்ளுங்கள். இவை எதையும் வைத்து வழிபட முடியவில்லை என்றாலும் ஒரு துண்டு வெல்லம் மட்டும் வைத்தாலும் கூட போதும் விநாயகர் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்.
இப்போது விநாயகர் படத்திற்கு முன்பாக மூன்று அகல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி ஏற்றினால் நல்லது. இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எரிய வேண்டும். அது உங்கள் வீட்டின் பூஜை அறையை அமைப்பை பொறுத்து ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த தீபத்திற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து விநாயகரின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை சொல்லவேண்டும் இது மிக மிக அவசியம்.
இவ்வளவு தான் மந்திரம். இந்த மந்திரத்தை சதுர்த்தி நாளன்று 108 முறை விநாயகரை நினைத்து சொல்லும் பொழுது நிச்சயம் நம்முடைய பணக்கஷ்டம் மனக்கஷ்டம், அனைத்தும் நீங்கி வளமானதொரு வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டுடன் அன்றைய தினத்தில் விநாயகரின் ஆலயத்திற்கு சென்று அவரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது அன்றைய தினத்தில் ஆலயத்திற்கும் அருகம்புல் மாலை வாங்கி கொடுங்கள்.
இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் நன்றாக படிக்க பிள்ளையாருக்கு ஏற்ற வேண்டிய விளக்கு
இந்த தீப வழிபாட்டை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் ராகு காலம் எமகண்டம் இருக்கக் கூடாது அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். முருகனை வழிபடக்கூடிய இந்த சஷ்டி காலத்தில் அவருடைய அண்ணனான விநாயகரை இந்த முறையில் வழிபடும் போது விநாயகரின் அருள் மட்டும் இன்றி முருகனின் அருளையும் சேர்த்து பெறலாம். இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியோடு வாழக்கூடிய யோகத்தை பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.