- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிள்ளைகள் நன்றாக படிக்க பிள்ளையாருக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

பிள்ளைகள் நன்றாக படிக்க பிள்ளையாருக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

- Advertisement -

பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால், சரஸ்வதி, வழிபாடு ஹயக்ரீவர் வழிபாட்டை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் பிள்ளைகள் நன்றாக படிக்க அவர்கள் கல்வியில் இருக்கும் தடை விலக, ஞாபக சக்தி அதிகரிக்க, விநாயகர் வழிபாடும் கை கொடுக்கும். அதற்கு உகந்த ஒரு வழிபாட்டை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.

பிள்ளையார் வழிபாடு

முதல் நாள் துவங்கிய இந்த வழிபாட்டை தொடர்ந்து 16 நாட்கள் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றது போல நீங்கள் தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்காக, தாய்மார்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடிய அளவுக்கு பெரிய பிள்ளைகளாக இருந்தால், அவர்களே தங்களின் கையால் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்திற்கும் முன்பாக இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடவுங்கள். விநாயகர் முன்பு ஒரு சின்ன கிண்ணத்தில் 5 ஏலக்காய்கள் வைக்க வேண்டும். இன்னொரு சின்ன கிண்ணத்தில் 2 பேரிச்சம் பழம் வைக்க வேண்டும். சின்ன மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி பச்சை நிற திரி போட்டு தீபம் ஏற்றி ‘ஓம் கணேசாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும்.

பிறகு கற்பூர ஆரத்தை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். மனம் உருகி விநாயகரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினமும் இதேபோல வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். தினம் தினம் பழைய ஏலக்காய்களை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேகரிக்க வேண்டும். பேரிச்சம் பழத்தை மட்டும் பிள்ளைகள் பிரசாதமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

16 நாள் வழிபாட்டு முடியட்டும். பதினாறு நாட்களுக்கும், ஐந்தைந்து ஏலக்காய்கள் சேர்ந்திருக்கும். மொத்தம் 80 ஏலக்காய்கள் உங்கள் கையில் எப்போது சேர்ந்திருக்கும். 16 நாள் வீட்டில் இந்த விளக்கேற்றும் வழிபாடு முடிந்த பிறகு, அதை ஒரு பச்சை நிற நூலில் கோர்த்து, ஒரு ஹயக்ரீவர் கோவிலில் மாலையாக போட்டு, உங்கள் பிள்ளையின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நோய் நொடிகள் விலக திருப்புகழ்

உங்கள் வீட்டின் அருகில் ஹயக்ரீவர் கோவில் இல்லை எனும் பட்சத்தில் விநாயகர் கோவிலில் அந்த மாலையை செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். 16 நாள் இந்த வழிபாட்டை செய்யும்போதே, உங்களுடைய பிள்ளைகளின் படிப்பு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நீங்க வேண்டும் என்றால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். 16 நாட்களில் உங்களுடைய பிள்ளைகளின் போக்கு உங்களுக்கே மன நிம்மதியை தரும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்