- Advertisement -

கஷ்டங்கள் காணாமல் போக திருச்செந்தூர் முருகன் வழிபாடு

நம் எல்லோருக்குமே தெரியும். முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் இந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலும் ஒன்று. நாம் நினைத்தால் இந்த கோவிலுக்கு செல்ல முடியாது. அந்த திருச்செந்தூர் முருகப் பெருமானே நமக்கு ஆசிர்வாதம் செய்தால் மட்டும் தான் அந்த இடத்திற்கு நம்மால் செல்ல முடியும்.

வெளிமாநிலங்களுக்கு, வெளி நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தவர்கள் கூட இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் மண்ணை மிதிப்பதற்கு பாக்கியத்தை பெற்றிருக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு புண்ணியத்தை சேர்ப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று தான் அர்த்தம். அடுத்த முறை உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அன்றோடு முடியும்.

- Advertisement -

திருச்செந்தூர் முருகன் கோவில் பரிகாரம்

திருச்செந்தூர் கோவில் பிரகாரத்திலேயே, அருகிலேயே வெற்றிலை கிடைக்கும். 6 வெற்றிலை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த கடற்கரை மணலிலேயே அமர்ந்து கொள்ளவும். உங்களுடைய கஷ்டத்தை அந்த 6 வெற்றிலையில் எழுதுங்கள். ஏதாவது ஒரு கஷ்டமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டிய கஷ்டம் எது?

கடன் சுமையா அல்லது நோய்நொடி பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா கோர்ட் கேஸ் வழக்குகளில் இருந்து விடுபட வேண்டுமா. எதிரி தொல்லை நீங்க வேண்டுமா. எதுவாக இருந்தாலும் உங்களை விட்டு விலக வேண்டிய ஒரு விஷயத்தை அந்த ஆறு வெற்றிலையிலும் ஒரு வரியில் எழுதி விடுங்கள். கடல் பக்கத்திலேயே இருக்கிறது.

- Advertisement -

முருகனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு அலை உங்களை நோக்கி வரும். அந்த அலை திரும்ப செல்லும்போது அந்த அலையோடு ஒரு வெற்றிலையை போட வேண்டும். உங்களை நோக்கி வந்த அலை வெற்றிலையை கடலுக்குள்ளே இழுத்துச் சென்று விடும். இதுபோல 6 முறை அந்த வெற்றிலையை முருகப்பெருமானை நினைத்து கடலில் விட்டு விடுங்கள்.

உங்கள் கஷ்டம் அந்த கடலில் அலையோடு அலையாக உங்களை விட்டு சென்றுவிடும் இது நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம். அடுத்த முறை முருகன் கோவிலுக்கு செல்லும்போது இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் அந்த குறிப்பிட்ட ஒரு கஷ்டம் உங்களை விட்டு விலகிவிடும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையான ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற சூட்சம வழிமுறை

நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலனடையலாம். எந்த கிழமையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடலுக்கு அருகில் சென்று இந்த வெற்றிலையை விடும்போது மட்டும் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள் ஜாக்கிரதை. முருகனை நம்பியவர்கள் யாரும் கைவிடப்பட்டதில்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -