
கலைமகள் உதித்த இந்த பாற்கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். இதை வீட்டில் குறையாமல் வைத்திருப்பவர்களுக்கு செல்வம் சேரும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட இந்த கல் உப்பை கொண்டு இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது, நமக்கு வந்த கஷ்டம் எல்லாம் கண் காணாத இடத்திற்கு தூரமாய் ஓடி விடுமாம். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
வீட்டில் எப்பொழுதும் கஷ்டமான சூழ்நிலை மனதை வாட்டிக் கொண்டே இருந்தால், இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். துன்பமான சூழ்நிலையில் கடவுளை அழைக்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்கும் இறைவன் எல்லா பொருட்களிலும் நிறைந்து காணப்படுகிறார். பணக்கஷ்டம், மன கஷ்டம், துன்பம், துயரம் ஒரு வீட்டில் அழுகை சத்தம் எதன் மூலமாவது கேட்டுக் கொண்டே இருந்தால் இந்த பரிகாரத்தை கண்டிப்பாக செய்யுங்கள்.
எந்த கஷ்டமாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது ரொம்ப எளிதாகவே அதிலிருந்து மீண்டு விடுவீர்கள். ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி கோப்பையில் அதை போட்டு அதன் மீது ஒரு எலுமிச்சை பழத்தை வையுங்கள். பின்னர் வீட்டின் நடுப்பகுதியில் கொண்டு போய் வையுங்கள். ஒரு இரவு முழுவதும் உப்பு அங்கேயே இருக்க வேண்டும்.
வீட்டின் நான்கு திசைகளையும் இணைக்கும் இந்த நடுப்புற பகுதியில் கல் உப்பை வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் ஈர்க்கப்படும் என்பது வாஸ்து முறை ஆகும். இந்த பரிகாரத்தை மாலை வேளையில் அந்தி சாய்ந்த பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் தயாரித்து வையுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் அதை அப்படியே ஒரு பேப்பரில் மடித்து கொண்டு போய் நீர்நிலைகளில் போட்டு விடுங்கள்.
நீர்நிலைகள் அருகில் இல்லாதவர்கள், சிங்கில் போட்டு தண்ணீரை ஊற்றி கரைத்து தள்ளுங்கள். இது போல தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்து 9 முறை செய்ய வேண்டும். ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். ஞாயிறு அல்லது திங்கட் கிழமையில் செய்வது நல்லது. இப்படி செய்யும் பொழுது வீட்டில் எதிர்மறை சக்திகள், கண் திருஷ்டிகள், செய்வினை கோளாறுகள் எதுவாக இருந்தாலும் அவை காணாமல் போகும். இதனால் குடும்பத்தில் இருக்கும் எதிர்மறை விலகி, கஷ்டங்கள் தீர்ந்து, அழுகை சத்தம் நின்று சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:
ஒன்பது வாரத்தில் திருமணம் நடக்க முருகர் வழிபாடு
எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் அழுகை சத்தம் இருந்தால், அந்த வீட்டில் துர்ஷக்திகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும். குறிப்பாக அந்தி சாய்ந்த பிறகு பெண்கள் அழுவது நல்லதல்ல! இது குடும்பத்திற்கு எதிர்மறையான சிக்கல்களை உண்டு பண்ணும். பண ரீதியாக, மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்தி சாய்ந்த பிறகு பெண்களை அழாமல் ஆண்கள் பார்த்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது. பெண்கள் குடும்பத்திற்காக அந்த நேரத்தில் மனதை சாந்தப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பெண்களின் கண்ணீருக்கு மாபெரும் சக்தி உண்டு. நீங்களே உங்கள் குடும்பத்திற்கு துன்பத்தை வரவழைக்காதீர்கள்.