40 வயதைக் கடந்த பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, திருமணம் நடக்கவில்லை என்றால், அது ஒரு மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயம். திருமணம் நடக்கவில்லை என்பது நமக்கு பாதி வருத்தமாக இருந்தால், ஊரில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. காலகாலத்தில் திருமணம் நடக்க வேண்டும், காலகாலத்தில் பிள்ளை பேரு பெற வேண்டும், குடும்பம் சுபிட்சம் அடைய வேண்டும், என்றால் செய்ய வேண்டிய வழிபாடு முருக பெருமான் வழிபாடு.
உங்களுக்கும் திருமணம் நடப்பதில் தாமதம் இருக்கிறதா, வீட்டு பக்கத்தில் வள்ளி தெய்வயானையோடு இருக்கும் முருகர் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டை ஒன்பது வாரங்கள் விடாமல் செய்யுங்கள். நிச்சயம் திருமணம் கைகூடி வரும்.
திருமணம் நடக்க முருகன் வழிபாடு
செவ்வாய்க்கிழமை தோறும் வள்ளி தெய்வானையோடு இருக்கும் முருகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். முருகருக்கு 2 நெய் விளக்கு, மஞ்சள் நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். (வெள்ளை பஞ்சு திரியை மஞ்சளில் பிரட்டி, நிழலிலேயே உலர்த்தி காய வைத்து மஞ்சள் திரி தயார் செய்ய வேண்டும்.) விளக்கு போட்டு முருகரை ஆறு முறை வலம் வர வேண்டும். முருகருக்கு மஞ்சள் நிற பூக்களை வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.
9 வாரம் செவ்வாய்க்கிழமை காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் மஞ்சள் எலுமிச்சம்பழம். செவ்வாய்க்கிழமை கையில் எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு முருகா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை முருகன் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து திரும்பவும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து, அதை கொஞ்சம் சாறு எடுத்து குடித்து விடவும். ஒன்பது வாரமும், புது எலுமிச்சம் பழம் வாங்கி முருகனின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்துவிட்டு இந்த சாரை நீங்கள் பருகி விடுங்கள்.
ஒன்பதாவது வாரம் முருகப்பெருமானுக்கு மஞ்சள் வஸ்திரம், வள்ளி தேவயானிக்கு மஞ்சள் கயிறு, தாலி கயிறு வாங்கி எடுத்துச் செல்ல வேண்டும்.(முடியும் என்றால் வள்ளி தெய்வானைக்கும் மஞ்சள் நிற புடவை சாத்தலாம்). மஞ்சள் நிற பிரசாதம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்ச பழ சாதம் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதையெல்லாம் தயார் செய்து எடுத்துக் கொண்டு வெற்றிலை பாக்கு பூ பழத்தோடு முருகப்பெருமானுக்கு உங்கள் பெயர் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
அம்பாள் பாதத்தில் வைத்த அந்த மஞ்சள் கயிறை வாங்கி நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். மஞ்சள் நிற பிரசாதத்தை, எலுமிச்ச பழ சாதத்தை கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு அன்னதானம் செய்து விடுங்கள். இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு எவரொருவர் ஒன்பது வாரம் தவறாமல் செய்கிறீர்களோ, அவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் திருமணம் நடக்கும் என்பது தான் நம்பிக்கை.
ஒரு செவ்வாய் கிழமை, ஒரு சுமங்கலி பெண்ணுக்கு தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு, ஒரு நல்ல மஞ்சள் புடவையுடன், ரவிக்கை துணி, வைத்து மஞ்சள் கயிறு வைத்து தானமாக கொடுக்கலாம். இது வசதி இருப்பவர்கள் மட்டும் செய்தால் போதும். இதுபோல முருகப்பெருமானை ஒன்பது செவ்வாய் கிழமை எவர் ஒருவர் மனம் உருகி வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். பெண்களுக்கு இடையில் மாதவிடாய் நாட்கள் வரும்.
இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் மந்திரம்
அந்த வாரத்தை தவிர்த்து விட்டு மற்ற வாரத்தை அப்படியே கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்க வேண்டும் என்றால் முருகன் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொள்வதுதான் ஒரே வழி. ஜாதக கட்டத்தில் எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் அது நிவர்த்தியாகும். பெண்களுக்கு இருக்கும் மாங்கல்ய தோஷமும் நிவர்த்தி ஆகும். திருமணம் நடக்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமே இந்த வழிபாடு இல்லை. திருமணம் நடந்தும் இல்லற வாழ்வில் நிம்மதி இல்லை என்று சொல்லக்கூடிய ஆண் பெண் இருபாலரும் இந்த வழிபாட்டை செய்யலாம் இல்லற வாழ்க்கை இனிக்கும்.