- Advertisement -

கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். கண்டிப்பான முறையில் ஒரே ஒரு கஷ்டம் மட்டும் இருக்காது. ஒன்றிற்கும் மேற்பட்ட பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுவதற்கு விநாயகப் பெருமானின் இந்த ஒரு வழிபாடு நமக்கு உதவி செய்யும். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகிழ்ச்சியான வாழ்க்கை வழிபாடு

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக திகழ்வது சதுர்த்தி திதி. மாதா மாதம் வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு சதுர்த்திகள் வரும். பொதுவாக அனைவரும் தேய்பிறையில் வரக்கூடிய சங்கடகர சதுர்த்தி அன்றுதான் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வார்கள். வளர்பிறை சதுர்த்தியில் அந்த அளவிற்கு யாரும் பெரிதும் வழிபாடு செய்ய மாட்டார்கள். அந்த வளர்பிறை சதுர்த்தி ஆவணி மாதத்தில் வரும் பொழுது அனைவரும் அதை விநாயகர் அவதரித்த நாளாக கருதி வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட வளர்பிறை ஆவணி மாத சதுர்த்தி நாள் அன்று நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான அர்ச்சனை நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்கும்.

- Advertisement -

விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக திகழக்கூடிய ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி நாளன்று பலரும் பல விதங்களில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலர் கடையிலிருந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து அவருக்கு அலங்காரம் செய்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது விநாயக பெருமானுக்கு விருப்பமான பொருட்களை வைத்து விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்து விநாயகர் பெருமானுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து கற்பூர தீப தூப ஆரத்தி காட்டி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது அனைவருக்குமே இருக்கும். இந்த வழிபாட்டில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சமம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்கும்.

அப்படிப்பட்ட அர்ச்சனைக்கு தேவையான பொருளாக வெள்ளெருக்கு இலை திகழ்கிறது. பொதுவாகவே விநாயகப் பெருமானுக்கும் வெள்ளெருக்கும். அதிகளவு தொடர்பு இருக்கிறது. அதிலும் விநாயகர் சதுர்த்தி நாளன்று வெள்ளெருக்கு இலையை வைத்து நாம் அர்ச்சனை செய்யும் பொழுது வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும். 108 எண்ணிக்கையில் வெள்ளெருக்கு இலையை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி எந்த நேரத்தில் விநாயகருக்குரிய சதுர்த்தி வழிபாட்டை நாம் செய்கிறோமோ அந்த நேரத்தில் விநாயகப் பெருமானின் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறை கூறி அந்த வெள்ளருக்கு இலையால் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம் எப்படி அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதன் மூலம் நமக்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கிறதோ அதேபோல் வெள்ளருக்கு இலையால் அர்ச்சனை செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு

கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கையை யாராலும் வாழ முடியாது. அதே சமயம் அதிக அளவில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியாமல் இருப்போம். அப்படி சமாளிக்க முடியாத கஷ்டத்தையும் சமாளித்து வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விநாயகரின் இந்த வழிபாடு நமக்கு உதவி செய்யும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -