- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரார்த்தனைகளை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு

பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய வீட்டில் கோலாகலமாக கொண்டாடுவார்கள். விநாயகப் பெருமானின் சிலையை வீட்டில் வாங்கி வைத்து அவருக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து அவருக்கு சிறப்பு மிகுந்த வழிபாடுகளையும் அர்ச்சனைகளையும் செய்து மகிழ்வோம். அவ்வாறு செய்வதன் மூலம் விநாயகரின் அருளை நம்மால் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் நாம் வைக்கக்கூடிய பிரார்த்தனை நிறைவேறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வழிபாடு

முழுமுதற் கடவுளாகவும், காரிய வெற்றியை தரக்கூடியவராகவும் திகழ்பவர் விநாயகப் பெருமான். தேவர்கள் அனைவருக்கும் தலைவராகவும் திகழக்கூடியவர் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை யார் ஒருவர் அனுதினமும் வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் தொட்ட காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். மேலும் விநாயகர் பெருமான் மிகவும் எளிமையான கடவுள் என்பதால் அவரை வழிபாடு செய்வதற்கு பெரிதும் நாம் செலவு செய்ய வேண்டும் என்றோ, சிரமப்பட வேண்டும் என்றோ அவசியம் கிடையாது. மிகவும் எளிமையாக தலையில் மூன்று முறை கொட்டி, மூன்று தோப்புக்கரணம் போட்டாலே போதும். விநாயகர் மனம் மகிழ்ந்து நாம் வேண்டியதை நமக்கு அருள்வார்.

- Advertisement -

அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்குரிய விநாயகர் சதுர்த்தி நாளிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நாம் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய பிரார்த்தனையை விரைவில் நிறைவேற்றும். இந்த வழிபாட்டை விநாயகர் சதுர்த்தி நாளான ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஆரம்பித்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலும் அதேசமயம் மாலை 6:00 மணிக்கும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். மூன்று நாட்களும் இரண்டு வேளை நாம் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி எப்பொழுதும் செய்யக்கூடிய விநாயகர் சதுர்த்தி வழிப்பாட்டோடு சேர்த்து இந்த வழிபாட்டையும் செய்ய வேண்டும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் படம் அல்லது சிலைக்கு அருகம்புல் அல்லது அருகம்புல் மாலையை சாற்ற வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக காய்ச்சாத பசும்பாலை வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு நம்முடைய பிரார்த்தனை என்னவோ அதை முழு மனதோடு விநாயகப் பெருமானிடம் கூற வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பாலை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும்.

- Advertisement -

இதே முறையில் மாலை நேரத்திலும் புதிதாக அருகம்புல் வைத்து, காய்ச்சாத பாலை நெய்வேத்தியமாக வைத்து, ஏற்கனவே காலையில் பயன்படுத்திய அகல் விளக்கில் இருக்கக்கூடிய திரியை மட்டும் புதிதாக மாற்றி தீபமேற்றி அதே பிராத்தனையை முன்வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் 27, 28, 29 இந்த மூன்று நாட்களும் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமான் விரைவிலேயே நம்முடைய பிரார்த்தனையை நிறைவேற்றுவார். ஒரே பிராத்தனையை தான் மூன்று நாட்களும் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: விநாயகர் சதுர்த்தி புராணக்கதை

புதிதாக விநாயகரை வீட்டிற்கு வாங்கி வைத்து வழிபாடு செய்பவர்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அதோடு சேர்த்து இந்த வழிபாட்டையும் செய்ய விரைவிலேயே நம்முடைய வேண்டுதலும், பிரார்த்தனையும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்