
பௌர்ணமி தினத்தில் பெண் தெய்வ வழிபாட்டை செய்பவர்களுக்கு வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பௌர்ணமி தினத்தன்று பெண் தெய்வ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் நடைபெறுகின்றன. மேலும் அன்றைய தினத்தில் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலமும் அவர்களுடைய வாழ்க்கையில் எண்ணில் அடங்காத நன்மைகள் உண்டாக்கும். அந்த வகையில் கேட்ட வரம் கிடைப்பதற்கு பௌர்ணமி தினத்தன்று வாராகி அம்மனுக்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கக்கூடிய வேண்டுதலும் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் பௌர்ணமி தினத்தில் வாராகி அம்மனை நினைத்து இந்த ஒரு வழிபாட்டை செய்தால் போதும். விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும் அல்லது நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இதை நாம் பரிகாரமாகவும் செய்யலாம் வழிப்பாடாகவும் செய்யலாம் நாம் எவ்வாறு நினைத்து செய்கிறோமோ அதற்கேற்றார் போல் நமக்கு பலன் இருக்கும்.
இந்த வழிபாட்டை இன்று இரவு 12 மணிக்குள் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு கல் உப்பு மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. இந்த வழிபாட்டை செய்வதற்கு நாம் சுத்தமாக குளித்து இருக்க வேண்டும். மற்றபடி வேறு எந்த நிபந்தனையும் கிடையாது. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சமயத்திலும் இந்த வழிபாட்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அமைதியான ஒரு இடத்தில் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் கிழக்கு பார்க்கவாரு அமர்ந்து கொள்ளுங்கள். நாம் அமர்வதற்கு முன்பாக நம்முடைய வலது கையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் நாம் அமரக்கூடிய இடத்திற்கு பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு அந்த கல் உப்பை உங்களுடைய மடியில் வைத்துக்கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வேண்டுதலை முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்துக் கொண்டு கூற வேண்டும்.
இவ்வாறு கூறி முடித்த பிறகு வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 15 நிமிடமாவது மனதார உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு மறுபடியும் உங்களுடைய வேண்டுதலை திரும்ப வாராகி அம்மனிடம் முன் வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய கல் உப்பை பக்கத்தில் இருக்கும் பாத்திரத்தில் இருக்கக்கூடிய தண்ணீரில் நன்றாக கரைத்து விடுங்கள். கரைத்துவிட்ட பிறகு அந்த தண்ணீரை உங்களுடைய சமையல் அறையில் இருக்கக்கூடிய சிங்கில் ஊற்றி விட வேண்டும். இந்த வழிபாட்டை யார் ஒருவர் வாராகி அம்மனை நினைத்து முழு மனதோடு பௌர்ணமி தினத்தன்று செய்கிறார்களோ அவர்களுடைய வேண்டுதலை வாராகி அம்மன் விரைவிலேயே நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.
“ஓம் ஐம் க்லௌம் சிவசம்பு வாராஹி வா வா ஸ்வாஹா”
இதையும் படிக்கலாமே:சித்திரை கனி காணுதல் 2025
முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து பௌர்ணமி தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். முழுமனதோடு செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.