- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசித்திரை கனி காணுதல் 2025

சித்திரை கனி காணுதல் 2025

- Advertisement -

சித்திரை மாதம் முதல் நாள் சூரியன் ராசிகளின் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் பொழுது தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழர்களுக்கு இது தான் ஆண்டின் துவக்க நாளாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு குரோதி வருடம் முடிந்து விசுவாவசு ஆண்டு புதிதாக பிறக்கும் நிலையில் எப்படி புத்தாண்டை வரவேற்கப் போகிறோம்? ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாகவும், செல்வ செழிப்போடும் இருக்க சித்திரை நாள் வழிபாடு முறை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இப்பதிவில் அறிவோம் வாருங்கள்.

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:30 மணி அளவில் நுழையும் பொழுது பிறக்க இருக்கிறது. இவ்வாண்டு அதிகாலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி குளித்து முடித்து சுத்த பத்தமாக வீட்டின் மூத்த பெண்கள் இந்த வழிபாடு முறையை துவங்க வேண்டும் எனவே முந்தைய நாளே அதற்குரிய ஏற்பாடுகளை தயார் செய்தால் தான் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவே பூஜைக்கு உரிய ஏற்பாடுகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சித்திரை பூஜையில் மிகவும் முக்கியமாக இடம் பெற வேண்டிய ஒரு பொருள் கண்ணாடி! புதிய அல்லது பழைய பூஜைக்கு உரிய கண்ணாடியை பூஜையில் வையுங்கள். அதற்கு சந்தன, குங்குமம் இட்டு, கொஞ்சம் பூவை வையுங்கள். கண்ணாடியில் தெரியும் படியாக அதற்கு முன்பாக மற்ற பொருட்களை தாம்பூல தட்டில் தயார் செய்ய வேண்டும்.

ஒரு பெரிய தாம்பூலத்தில் முதலில் பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். முக்கனிகளும் அதில் இடம்பெற வேண்டும். வாழை சீப்பு ஒன்றை வைத்து பின்னர் மாம்பழம், பலாப்பழ சுளைகள், மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு என்று உங்கள் விருப்பமான பழங்களை அழகாக அடுக்கி மேலே கொஞ்சம் பூவையும் வையுங்கள். அடுத்த தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல் போன்றவற்றை அடுக்கி வையுங்கள்.

- Advertisement -

மற்றொரு தாம்பூல தட்டில் சில்லறை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும், தங்க நாணயங்களும், உங்களிடம் இருக்கும் மற்ற ரத்தினங்களும் அடுக்கி வைக்க வேண்டும். அடுத்ததாக நவதானியங்களை அடுக்கி வைக்க வேண்டும். நவதானியங்களை வைக்க முடியாவிட்டால் அதில் ஏதாவது ஒரு தானியங்களை வையுங்கள். மற்றொரு தட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு, வெல்லம், பேரீச்சை போன்றவற்றை வையுங்கள். ஒவ்வொரு பொருட்களையும் கோபுரம் போல் குவித்து வைக்க வேண்டும், தலை தட்டக்கூடாது.

பின்னர் ஒரு பித்தளை அல்லது செம்பு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை போட்டு, துளசி இலைகளை போட்டு தீர்த்தம் செய்து வையுங்கள். பின்னர் காலையில் உங்கள் வீட்டின் மூத்த பெண் தயாராகி அந்த கண்ணாடியில் முதலில் எல்லா பொருட்களையும் பார்க்க வேண்டும். இதனை கனி காணுதல் என்பார்கள். பின்னர் வரிசையாக எல்லோரையும் எழுப்பி பார்க்க சொல்ல வேண்டும். வாசலில் வண்ண கோலம் பெரியதாக போட்டு அதில் நடுவில் கிழக்கு முகமாக ஒரு விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வரவேற்க வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
தங்கம் சேர பங்குனி பௌர்ணமி பரிகாரம்

எல்லோரும் கண்ணாடியில் தாம்பூலத்தில் இருக்கும் அத்தனை பொருட்களையும் பார்த்த பின்பு பூஜைக்கு சர்க்கரைப் பொங்கல், பாயாசம் போன்ற இனிப்பான நைவேத்திய பதார்த்தங்களை தயார் செய்து படைத்து, மற்ற எல்லா தெய்வங்களையும் வழிபட்டு அன்றைய நாளை சுயநலமாக அல்லாமல், பொது நலமாக உலக நன்மைக்காக வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உலக மக்கள் அனைவருக்கும் வறுமை இல்லாமல் இருக்கவே தாம்பூலத்தில் தானியங்களும், அரிசி, பருப்பு போன்றவையும் வைக்கிறோம். செல்வங்களும், மற்ற எல்லா வளங்களும் அனைவருக்கும் கிடைக்க மனதார பிரார்த்தித்து இந்த சித்திரை மாதத்தை வரவேற்று, தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்.

சற்று முன்