- Advertisement -

கொடுத்த பணத்தை திரும்ப பெற வரமிளகாய் பரிகாரம்

நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் இப்படி யாராவது ஒருவர் கஷ்டம் என்று பணம் கேட்டால், நம் கையில் பணம் இருந்தால், நம்முடைய மனது தாங்காது. இறக்கப்பட்டு அந்த பணத்தை கடனாக கொடுத்து விடுவோம். ஆனால் இப்படி கடனாக கொடுத்த பணம் பல வருடங்கள் கழித்தும், நம்முடைய கைக்கு திரும்பாமல் இருக்கும். நாமும் கெஞ்சி கேட்டு பார்த்திருப்போம்.

ஆனால் பணம் வந்திருக்காது. சண்டை போட்டும் கேட்டு பார்த்திருப்போம். ஆனாலும் பணம் வந்திருக்காது. சரி என்னதான் செய்வது. வரும்போது வரட்டும் என்று அந்த பணத்தை அப்படியே விட்டு வைத்திருப்போம். நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் நம் கைக்கு திரும்பவில்லை என்றால் எவ்வளவு மன வருத்தம் இருக்கும். இதில் கொடுத்த நமக்கு கெட்ட பெயர் வேற போனஸ். சரி, இந்த பிரச்சனையிலிருந்து விடுபட என்னதான் செய்வது. ஆன்மீகத்தில் ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரம் இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

கடனாக கொடுத்த பணத்தை திரும்பவும் பெற

100 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு உங்கள் வசதிக்கேற்ப ஒரு நோட்டு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற காகிதத்தில் யாரிடம் பணத்தை கொடுத்து இருக்கிறீர்களோ, எவ்வளவு ரூபாய் கொடுத்திருக்கிறீர்களோ, அந்த விவரத்தை எழுதவும். உதாரணத்திற்கு, ரமேஷிடம் கொடுத்த 1 லட்ச ரூபாய் கடன் திரும்பவும் வர வேண்டும் என்று எழுதி கொள்ளவும்.

ரூபாய் நோட்டுக்கு மேலே அந்த காகிதத்தை வையுங்கள். இதற்கு நடுவே ஒரு வரமிளகாயை வைத்து, அந்த ரூபாய் நோட்டையும் அந்த காகிதத்தையும் அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி ஒரு டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்து விட்டு மனதார குலதெய்வத்திடம் உங்கள் பணம் சீக்கிரம் உங்கள் கையை வந்து சேர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்தால் இத்தனை நாட்களுக்குள் கட்டாயம் பணம் உங்கள் கையை வந்து சேரும் என்று சொல்ல முடியாது. ஆனால் பல வருடங்களாக உங்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருபவர்கள், கூடிய சீக்கிரம் அந்த பணத்தை கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுவார்கள் என்பது தான் இந்த பரிகாரத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.

நிச்சயம் பணம் வரும் என்று நம்பி இந்த பரிகாரத்தை செய்தால், குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் உங்களுடைய பணம் உங்கள் கையை வந்து சேரும். பணம் கைக்கு வந்த பிறகு இந்த மிளகாயை நெருப்பில் போட்டு விடவும். பேப்பரை கிழித்துப் போட்டு விடவும். அந்த ரூபாய் நோட்டை எடுத்து அன்னதானம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: 29.6.2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

அந்த காசுக்கு எவ்வளவு உணவு பொருள் வருமோ அதை வாங்கி யாருக்காவது தானம் கொடுத்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை செய்ய நேரம் காலம், நாள் கிழமை பார்க்க வேண்டாம். பதிவை படித்தவர்கள் பூஜை அறையில் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு பரிகாரத்தை செய்து வைக்கலாம். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -