- Advertisement -
சமையல் குறிப்புகள்

இட்லி, தோசைக்கு கொத்தமல்லி சட்னி செய்யும் முறை

காலை டிபனில் அடிக்கடி நிறைய சட்னி வகைகளை நாம் சுவைத்து இருப்போம். அதிலிருந்து சற்று மாறுபட்ட சட்னி வகைதான் இந்த கொத்தமல்லி சட்னி இதனை நாம் மிக விரைவாக சமைக்க முடியும். இந்த பதிவில் கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது என்று பாப்போம் வாருங்கள்.

கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

கொத்தமல்லி – 1 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி சட்னி செய்முறை:

முதலில் மிக்சியில் கொத்தமல்லி, துருவிய தேங்காய் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அதனை வேறு கின்னத்தில் மாற்றி உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

- Advertisement -

இப்போது ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து பிறகு அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு பொரிக்கவும். பின் அதனை நாம் ஏற்கனவே தயார் செய்துள்ள சட்னியில் ஊற்றி கிளறினால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 5 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இனிப்பான லட்டு செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Kothamalli chatni recipe in Tamil. It is also called as Kothamalli chatni seimurai or Kothamalli chatni seivathu eppadi in Tamil or Kothamalli chatni prepartion in Tamil.

- Advertisement -