லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்

laddu
- Advertisement -

இனிப்பு அல்லது ஸ்வீட் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது லட்டு. அந்த அளவிற்கு உணவு பிரியர்களிடையே லட்டு பிரசித்தம். அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகைதான் இந்த லட்டு. இந்த பதிவில் லட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

laddu_1

லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

கடலை மாவு – 1/4 கிலோ
சோடாஉப்பு – சிறிதளவு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராச்சை -20
முந்திரி – 20
கிராம்பு – 5
எண்ணெய் – தேவையான அளவு
சக்கரை – 1/2 கிலோ
ஏலக்காய் தூள் – சிறிதளவு

லட்டு செய்முறை:

முதலில் ஒரு பவுலில் கடலை மாவினை கொட்டி அதனுடன் சோடாமாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

- Advertisement -

laddu_2

பிறகு, ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு கொஞ்சமாக நீர் சேர்த்து கொதிக்கவைத்து சக்கரை பாகினை தயார் செய்யவேண்டும். சக்கரை பாகு தயாராகும் வேளையில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். எண்ணெய் கொதிக்கும்போது கலந்து வைத்த மாவினை பூந்தி கரண்டி மூலம் எண்ணையில் போட்டு 30 நொடிகள் விட்டால் பூந்தி தயாராகிவிடும்.

laddu_3

இவ்வாறாக மொத்த மாவினையும் பூந்தி கரண்டி மூலம் ஊற்றி பூந்தியாக பொரித்து எடுக்கவும். பிறகு சக்கரை பாகினை அடுப்பில் இருந்து இறக்கி சூடு குறையும் முன் அனைத்து பூந்திகளையும் அதில் கொட்டவேண்டும். மேலும் ஏற்கனவே பொரித்த திராச்சை முந்திரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அதனை கையில் எண்ணெய் தடவி சமமான அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேறொரு தட்டில் வைத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் சுவையான லட்டு தயார்.

laddu_4

சமைக்க ஆகும் நேரம் – 1 மணிநேரம்
லட்டுகளின் எண்ணிக்கை – 30

இதையும் படிக்கலாமே:
பரோட்டா செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Laddu recipe in Tamil. It is also called as Laddu seimurai or Laddu seivathu eppadi in Tamil or Laddu preparation in Tamil.

- Advertisement -