- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சந்தோஷம் நிலைத்திருக்க விநாயகர் தீபம்.

- Advertisement -

சந்தோஷம் நம் மனதில் நிலையாக குடி கொண்டு இருந்தாலே முகத்தில் ஒரு வித பொலிவும் தெய்வீகத் தன்மையும் குடிகொள்ளும். அந்த சந்தோஷம் நமக்கு நிலையாக இருக்க வேண்டும் எனில் முதலில் நம்முடைய எண்ணங்களும் செயல்களும் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் நல்லதையே சிந்திக்க வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும்.

இத்துடன் கூடிய தெய்வ வழிபாடு நம்முடைய குடும்ப நலனை நல்ல முறையில் அதிகப்படுத்தி கொடுக்கும். இதனால் என்றென்றைக்கும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம். நம்மை காண்பவருக்கும் அது ஒரு வித நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். இதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சந்தோஷம் நிலைத்திருக்க பரிகாரம்

இந்த தீபத்தை நாம் அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர் முன்பு தான் ஏற்ற வேண்டும். ஒரு வேளை உங்கள் வீட்டின் அருகில் அரசமரம் இருக்கிறது. ஆனால் விநாயகர் சிலை இல்லை என்றால் கடைகளில் கல்லினால் ஆன சிறிய விநாயகர் சிலை கிடைக்கும். அதை வாங்கி அரச மரத்தடியில் வைத்து இந்த பரிகார தீபத்தை ஏற்றலாம் தவறில்லை.

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் தினமும் மாவிளக்கை தயார் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் இது போல ஒரு ஆலயத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அங்கு தினந்தோறும் காலை வேளையில் மாவிளக்கை விநாயகருக்கு முன்பாக ஏற்ற வேண்டும்.

- Advertisement -

முதலில் விநாயகருக்கு முன்பாக ஒரு சிறிய தட்டில் மா விளக்கை வைத்து விடுங்கள். அதில் நெய் ஊற்றி ஐந்து திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதாவது நான்கு திசைக்கு ஒவ்வொரு தீபமும், நடுவில் ஒரு தீபம் எரிய வேண்டும். இப்போது இந்த நடுவில் எரியக் கூடிய தீபத்திற்கு கடைகளில் இதற்கென திரி ஸ்டாண்ட் இருக்கிறது அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தீபத்தை விநாயகருக்கு ஏற்றி வைத்து விட்டு வெல்லத்தை நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். தீபம் எரியும் போது விநாயகருக்கு முன்பாக நம் வீட்டில் நாம் நினைத்த காரியம் ஏதேனும் ஒன்று நடந்தேறி இருக்கும் அல்லது ஏதேனும் சுப நிகழ்ச்சி நடந்து இருக்கும். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக விநாயகரை வேண்ட வேண்டும்.

- Advertisement -

இதே போல் என்றென்றும் என் குடும்பம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேளை அப்படி ஏதும் நிகழவில்லை என்றாலும் நீங்கள் நினைத்த காரியம் நடந்தது போலவும் அதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைந்தது போலவும் பாவனை செய்து கொண்டு இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் அது நடக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகும்.

இந்த வழிபாடு உங்களுடைய சந்தோஷத்தை நிலையாக நிறுத்துவதுடன் முக வசீகரத்தை தரும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் கூட பரிகாரம் உண்டா என்று தானே யோசிக்கிறீர்கள். காரியங்கள் நிறைவேற நம் கடவுளை பிரார்த்திக்கிறோம் பரிகாரங்கள் செய்கிறோம்.

இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் முருகன் அருளை பெற சூட்சம வழிபாடு

அது போல அந்த காரியம் நிறைவேறியவுடன் தெய்வத்திற்கு நன்றி செலுத்த செய்யக் கூடிய பரிகாரங்களில் இதுவும் ஒன்று.இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -