- Advertisement -

இன்றைய காலத்தில் குலதெய்வ வழிபாட்டை பலரும் மேற்கொண்டு வருகிறார்கள். குலதெய்வத்தின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் குலதெய்வம் நம் வீட்டிற்கு வர வேண்டும். அப்படி வீட்டிற்கு வரும் குலதெய்வம் நம் உடனே இருந்து விட்டால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கவும், நிரந்தரமாக வீட்டிலேயே தங்க வைக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பலரும் பல ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்வது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. குலதெய்வ வழிபாடு என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நாம் வசிக்கும் வீட்டில் குலதெய்வத்தின் அருள் கிடைப்பதும் முக்கியமே. குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் தான் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும். நமக்கு ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குலதெய்வம் இருக்கும். அந்த குலதெய்வத்திற்கு உரிய வழிபாட்டு முறைகளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அய்யனார், கருப்பசாமி, மாரியம்மன், பெருமாள், முருகன் இப்படி பல தெய்வங்களும் பல பேருக்கு குலதெய்வங்களாக திகழ்கின்றன. அப்படி இருக்கும் பொழுது அந்த தெய்வத்திற்கு உகந்த வழிபாட்டை தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த வழிபாடு என்பது அனைத்து விதமான குலதெய்வத்திற்கும் பொருத்தமான வழிபாடாகவே திகழ்கிறது.

தீபத்தில் நாம் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் ஆகர்ஷணம் செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு நாம் ஆகர்ஷணம் செய்ய வேண்டும் என்றால் அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை நாம் முறையாக உச்சரிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நாம் குலதெய்வத்திற்காக ஒரு விளக்கை ஏற்றி வைத்து அந்த விளக்கின் ஜோதியில் குலதெய்வத்தை ஆகர்ஷணம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை குலதெய்வம் எது என்று தெரியாத நபர்களும் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

என்றைக்கு இந்த வழிபாட்டை ஆரம்பிக்க போகிறோமோ அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு பித்தளை தாம்பாள தட்டை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நாம் சந்தனம் வைக்கும் பொழுது அந்த சந்தனத்தில் சிறிதளவு அரகஜாவையும் சேர்த்து வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு சுத்தமான அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கிற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். அந்த சந்தனத்தில் அரகஜா கலந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அந்த அகல் விளக்கை தட்டில் வைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு முகம் பார்த்தவாறு தீபத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபத்தை ஏற்றும் பொழுது உங்களுடைய குல தெய்வத்தை நீங்கள் மனதார நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த தீபத்தை பார்த்து “ஓம் ஹ்ரீம் குல தேவதாப்யோ நமஹ” என்னும் மந்திரத்தை 36 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து 11 நாட்கள் இந்த தீபத்தை தினமும் ஏற்றி 36 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க குலதெய்வமானது இந்த தீபத்தில் வந்து குடியேறி விடும். இந்த தீபத்தை தினமும் ஏற்றி வழிபாடு செய்ய குலதெய்வம் தினமும் நம் வீட்டில் நிரந்தரமாக இருக்கும்.

இந்த அகல் விளக்கை சுத்தம் செய்து விடாதீர்கள். நீங்கள் எப்பொழுது இந்த விளக்கை சுத்தம் செய்கிறீர்களோ அப்பொழுது குலதெய்வமானது அந்த விளக்கில் இருந்து வெளியேறிவிடும் என்பதால் இந்த விளக்கை எப்பொழுதும் சுத்தம் செய்யக்கூடாது. அதிக அளவு எண்ணெய் படித்திருக்கிறது என்னும் பட்சத்தில் சுத்தமான காட்டன் துணியை வைத்து துடைத்து விட்டு மறுபடியும் பயன்படுத்த வேண்டுமே தவிர தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது.

இந்த மந்திரத்தை 11 நாட்கள் மட்டும் உச்சரித்தாலே குலதெய்வமானது விளக்கில் வந்து குடியேறி விடும். இதைத்தொடர்ந்து தினமும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம். அதில் எந்தவித தவறும் கிடையாது. 11 நாட்கள் வரை உச்சரித்துவிட்டு அப்படியே விட்டு விட்டாலும் தவறு கிடையாது. ஆனால் விளக்கை தினமும் ஏற்ற வேண்டும். சுத்தம் செய்யக் கூடாது.

இதையும் படிக்கலாமே: தானமாக பெறக் கூடாத பொருட்கள்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -