- Advertisement -

செவ்வாய் கிழமை குளிகை நேர சிறப்பு

- Advertisement -

மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரப்போகத்தான் இருக்கும். அய்யய்யோ பிரச்சனைகள் வந்துவிட்டதே என்று பிரச்சனைகளை கண்டு நாம் ஓட ஆரம்பித்தால், பிரச்சனைகள் நம்மை துரத்தும். ஒரு முறை அந்த பிரச்சனையை தைரியமாக திரும்பிப் பாருங்கள். பிரச்சனை நம்மை கண்டு ஓடிவிடும். எளிமையான இந்த முறையை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் சீக்கிரம் ஜெயிக்கலாம்.

இது தவிர, பிரச்சினைகளை சரி செய்யப்போகும் ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாட்டு முறையையும் இங்கு நாம் பார்க்க போகின்றோம். இந்த பரிகாரத்தை நீங்கள் எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அடமான நகையை மீட்க, கடன் தொகையை திருப்பித் தர, நல்ல வேலை கிடைக்க, காதல் கைகூட, திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற பிள்ளைகள் ஆரோக்கியம் பெற, நிறைய சம்பாதிக்க, தொழிலை ஜெயிக்க இப்படி எந்த வேண்டுதலை வைத்தாலும் அது அப்படியே நடக்கும். உங்கள் குடும்பத்திற்கு நல்லது மட்டுமே நடக்க, நினைத்ததை சாதிக்க செய்ய வேண்டிய அந்த பரிகாரம் பற்றிய தகவலை இப்போது பார்த்து விடுவோம்.

- Advertisement -

குளிகை நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்

பரிகாரம் செய்வதற்கு முன்பு சுத்தமாக தலைக்கு குளித்து விடுங்கள். நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போடுங்கள். அந்த தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு வரவும். குளித்து முடித்த பிறகு, பரிகாரத்தை செய்வதற்கு முன்பு யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூடாது.

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு மஞ்சள் பொட்டு வைத்து, திருச்செந்தூர் முருகனே துணை என்று எழுதி விடுங்கள். பிறகு உங்கள் கோரிக்கையை ஒரு வரியில் எழுத வேண்டும். ஒரு சிவப்பு நிற சதுர வடிவில் இருக்கும் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 11 ரூபாய் காணிக்கை வையுங்கள்.

- Advertisement -

கோரிக்கையை எழுதிய பேப்பரையும் அதில் வைத்து விடுங்கள். இதை முடிச்சாக கட்டி முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விட்டு, முருகா இந்த கோரிக்கையை சீக்கிரம் நிறைவேற்றி வை என்று நன்றாக மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முருகரின் மந்திர நாமங்கள், பாடல்கள் ஏதாவது படிக்க தெரியும் என்றால் பாடாலாம்.

விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை குளிகை நேரத்தில் செய்யவும். இதே போல வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை குளிகை நேரத்தில் உங்களுடைய வேண்டுதலை திருச்செந்தூர் முருக பெருமானிடம் சொல்லுவதாக நினைத்து, இந்த முடிச்சை தயார் செய்து, இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். ஒவ்வொரு முடிச்சாக சேர்ந்து கொண்டே வரும்.

- Advertisement -

இந்த முடிச்சை கட்ட தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே அந்த கோரிக்கை நிறைவேறி விடும். ஒரே ஒரு கோரிக்கையை வையுங்கள் பல வேண்டுதலை சொல்லி குழப்ப வேண்டாம். அந்த கோரிக்கை நிறைவேறிய பின்பு, அடுத்த கோரிக்கையை வைக்கலாம். ஒரு கோரிக்கை நிறைவடைந்த பிறகு, அந்த முடிச்சு காணிக்கையை கொண்டு போய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செலுத்தி அந்த பேப்பரை கிழித்து அங்கேயே திருச்செந்தூர் முருகப் பெருமான் சன்னதியில் குப்பைகள் போடும் இடத்தில் போட்டுவிட்டு வரவும்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் குறைய

உங்களால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது கோவிலுக்கு சென்று இந்த காணிக்கையை செலுத்தவும். செவ்வாய்க்கிழமை மதியம் 12:00 மணியிலிருந்து 1:30 மணி வரை குளிகை நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 5 வாரம், 7 வாரம் இந்த பரிகாரத்தை செய்யும்போதே உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிவிடும். திருச்செந்தூர் முருகனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -