- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

5 ரூபாய் போதும். மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.

லக்ஷ்மி தேவி தான் எங்கெல்லாம் வாசம் செய்வதாக தானே கூறிய புராணக்கதை ஒன்று உண்டு. தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமி ஆனவள், தான் கோபம் கொள்ளாதவர்களிடத்தில், நன்றி மறவாதவர்களிடத்தில், தர்மத்தை கடைப்பிடிப்போர் இடத்தில், காலத்தை வீணாக்காதவர்கள் இடத்தில், பசுக்களிடத்தில், வேத பிராமணர்களிடத்தில், அன்பும் ஆதரவும் ஆக உள்ளவர்கள் இடத்தில், பக்தி உள்ளவர்கள் வீடுகளில், வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் இடத்தில், கடமை உணர்வு உள்ளவர்கள் இடத்தில், யானை, ரிஷபம், அரசன், சிம்மாசனம், சாதுக்கள் இடத்தில், என்னிடத்தில் பக்தியுடன் இருப்பவர்கள் இடத்தில் நான் முழுமையாக வசிக்கிறேன் என்றும், அவர்களிடத்தில் பொன்னும் பொருளும் புண்ணியமும் வந்து சேரும் என்றும் அவரே கூறுகிறார். மேலும் மரியாதை தெரியாத பெண்கள் இடத்திலும், எப்போதும் தூங்கி கொண்டிருப்பவர்கள் இடத்திலும், சதா அழுகையுடன் இருப்பவர்கள் இடத்திலும், துக்கத்துடன் இருப்பவர்கள் இடத்திலும், பூமி அதிரும்படி நடப்பவர்கள் இடத்திலும், சுத்தம் இல்லாத வீட்டிலும் நான் வசிப்பதில்லை என்று கூறுகிறாள்.

மகாலட்சுமியானவர் பாற்கடலில் தோன்றியவர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே எனவேதான் கடலில் இருக்கும் உப்பை நாம் மகாலட்சுமிக்கு இணையாக ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இந்த உப்பின் அருமையும், செல்வாக்கும் என்ன என்பதை இப்பதிவில் நாம் காணலாம்.

- Advertisement -

இத்தகைய உப்பை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேகரித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். பீங்கான் ஜாடியில் உப்பைக் கொட்டி வைப்பதுதான் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மகாலட்சுமி வாசம் செய்யும் உப்பிற்கு நாம் செய்யும் மரியாதையும் ஆகும். உப்பு ஜாடியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நன்கு துடைத்து பராமரிக்க வேண்டும் மேலும் இந்த ஜாடியானது எப்பொழுதும் நிறைந்து காணப்பட வேண்டும். குறைய குறைய கொட்டிக் கொண்டே இருங்கள். இந்த உப்பு ஜாடிக்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைப்பது மிகச் சிறந்த பலன்களை தரும்.

இந்த உப்பிற்கு நாம் செய்யும் சிறிய பரிகாரம் ஆனது நமது வம்சத்தையே தழைக்க வைக்கும் ஒரு வழிபாடு ஆகும். இது வழிவழியாக செய்யப்படவேண்டிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் கல் உப்பை ஒரு ஜாடியிலும், தூள் உப்பை ஒரு ஜாடியிலும் சேகரித்து வையுங்கள். கல் உப்பில் தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் எனவே அதற்குரிய முக்கியத்துவத்தை அளிப்பது சிறந்தது.

- Advertisement -

27 வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் அன்றாட பூஜைகளை முடித்த பின்பு ஒரு புது ஐந்து ரூபாய் நாணயத்தை உப்பு ஜாடியில் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஐந்து ரூபாயை நீங்கள் போட்டுக்கொண்டே வருவதன் மூலம் உங்களின் செல்வம் மென்மேலும் பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம். வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடன் காணப்படும். 27 வாரங்கள் முடிந்த நிலையில் உப்பு ஜாடியில் இருக்கும் அனைத்து ஐந்து ரூபாய் நாணயங்களையும் எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் பொழுது அல்லது ஏழுமலையானை தரிசிக்க செல்கிறீர்கள் என்றால் அங்கு இருக்கும் உண்டியலில் சேர்த்து விடுங்கள். இல்லையெனில் இந்த பணத்தில் அன்னதானம் செய்வது போன்ற நற்காரியங்களுக்கு பயன்படுத்தலாம். உங்களுக்கு பிறகு உங்கள் மகள் அல்லது மருமகள் இதை தொடர்ந்து கடைபிடித்து வரலாம். இதுபோன்று தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் உங்கள் சந்ததியினரே அதன் பலனை அனுபவிக்க கூடும். நிரந்தரமாக மகாலட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிக்கலாமே
வெற்றி உங்களை தேடி வரவேண்டுமா? இதை மட்டும் செய்து பாருங்கள்.

English Overview:
Here we have Selvam peruga pariharam Tamil. Selvam peruga poojai Tamil. Selvam sera enna seiya vendum. Mahalakshmi vasam seiyya Tamil.

- Advertisement -