வெற்றி உங்களை தேடி வரவேண்டுமா? இதை மட்டும் செய்து பாருங்கள்.

durga-compressed

சிலருக்கு வாழ்க்கையில் வெற்றியானது மிகவும் சுலபமாக கிடைத்து விடும். ஒருவருக்கு அதிர்ஷ்டமும், ஜாதக கட்டமும் சரியாக இருந்தால் வெற்றியைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம் அந்த வெற்றியானது உங்களையே தேடி வந்துவிடும். ஆனால் எல்லா நேரமும் காலமும் நமக்கு அதிர்ஷ்டத்தை மட்டும்தான் தருமென்று உறுதியாக கூறிவிடமுடியாது. நம் ஜாதகத்தில் கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டால், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு காரியத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல படாதபாடுபட்டு இருந்தாலும், இறுதியில் அந்த காரியமானது தோல்வியை தழுவி விடும். மனம் நொந்த நீங்கள் அந்த இறைவன் மீது கோபம் கொள்ள தான் செய்வீர்கள். ஆனால் இதற்கெல்லாம் காரணம் நமது கெட்ட நேரம் என்பதை நம்மால் உணர முடியாது.

badrachalam-temple

வாழ்வில் ஒருவருக்கு தோல்வியே ஏற்படவில்லை என்றால் அந்த இறைவனை நாம் நினைத்து பார்ப்போமா? இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காக தான் இந்த வெற்றி தோல்வி என்ற நாடகங்கள் எல்லாம்.

நாம் விரைவாக வெற்றியை நோக்கி செல்ல வேண்டுமென்றால் நம் ஜாதகத்தில் ராகு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த ராகுவின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இதற்கு நாம் என்ன செய்வது. என்ற கேள்விக்கு பதில் தான் இந்த பதிவு.

ulunthu

ராகுவிற்கு மிகவும் உகந்த பொருள் என்றால் அது உளுந்து. ராகுவிற்கு உகந்த கல் என்றால் அது கோமேதகம். வசதி படைத்தவர்கள் மட்டும்தான் இந்த கோமேதகக் கல்லை வாங்கி பயனடைய முடியும்.

- Advertisement -

ஆனால் நம் அனைவராலும் வாங்க கூடிய பொருளாக இருப்பது உளுந்து. முதலில் ராகுவிற்கு உகந்த இந்த உலுந்தினை வாங்கி கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்று உளுந்தை ராகுவின் முன்பு வைத்தும் பூஜிக்கலாம், அல்லது துர்க்கையின் முன் வைத்தும் பூஜிக்கலாம். உளுந்தை ராகுவின் முன்பாகவோ அல்லது துர்க்கையின் முன்பாகவோ படைத்துவிட்டு நம் மனதிற்குள் ‘ஓம் துர்காய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, காரிய தடையானது நீங்கி நாம் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். ராகுவிற்க்கு அதிபதியாக இருப்பவர் துர்க்கை. ஆகையால்தான் துர்க்கையின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்பு அந்த உளுந்தை தானமாகவும் கொடுத்து விடலாம் அல்லது நம் வீட்டிற்கு கொண்டுவந்து பயன்படுத்தியும் கொள்ளலாம். அந்தணருக்கு தானமாக கொடுப்பது அதிக பலனை கொடுக்கும். இந்த பூஜையை செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் செய்வது சிறப்பானது. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் வரை தொடர்ந்து இந்த பூஜையை செய்து வரலாம்.

komethagam

நீங்கள் கோமேதகக் கல் வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தால், அந்த கோமேதகக் கல்லை உங்கள் பூஜை அறையில் வைத்து, அதற்கு செவ்வாய்க்கிழமை தோறும் குங்கும அர்ச்சனை செய்து ‘ஓம் துர்க்காய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அந்த குங்குமத்தை நெற்றியில் தினம்தோறும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த சுலபமான பூஜையை நம்பிக்கையோடு செய்து வருவதன் மூலம் உங்கள் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள் நீங்கி உங்களது வெற்றி உங்களை சுலபமாக தேடி வந்துவிடும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

இதையும் படிக்கலாமே
அனுமனுக்கு வெண்ணைக்காப்பு, துளசிமாலை, வெற்றிலை மாலை, வடைமாலை சாத்துவதில் இருக்கும் ரகசியம்.