- Advertisement -
சமையல் குறிப்புகள்

மணக்க மணக்க ருசியான மல்லி துவையல் செய்வது இப்படி தானா? மல்லிக்கட்டு நிறைய இருந்தா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க 4 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்!

- Advertisement -

மல்லி கட்டு குறைந்த விலைக்கு கிடைக்கும் பொழுது இந்த துவையலை அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்ல விஷயமாக இருக்கக்கூடிய இந்த துவையல் ஈசியாக செய்வது எப்படின்னு இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை! மல்லி துவையல் ரெசிபி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், சுலபமாகவும் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – தேவையான அளவு, மல்லி – இரண்டு கட்டு, வரமிளகாய் – நான்கு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, பூண்டு – 3 பற்கள், தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெல்லம் – ஒரு துண்டு.

- Advertisement -

செய்முறை

மல்லி துவையல் செய்வதற்கு முதலில் இரண்டு கட்டு பிரஷ்சான மல்லியை தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மல்லியின் அடிப்பாகம் தவிர மீதம் இருக்கும் தண்டுகளை எல்லாம் தூக்கி எறிய கூடாது, பயன்படுத்த வேண்டும். நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக வையுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காயும் பொழுது நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள மல்லித் தழைகளை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் காரத்திற்கு ஏற்ப ஐந்து வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்குங்கள். ஒரு நிமிடம் வதங்கியதும் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதை, நாரெல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மூன்று பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து வதக்குங்கள். மல்லி இலைகள் சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸர் ஜாரில் நன்கு நைஸ்சாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பெருங்காயத்தூள் தேவையான அளவிற்கு சேர்த்து அரைத்து வைத்துள்ள மல்லி சட்னியை இதில் ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்தது மூடி போட்டு மூடி வையுங்கள்.

- Advertisement -

இல்லையென்றால் எல்லா இடங்களிலும் சிதற வாய்ப்புகள் உண்டு. தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது நன்கு மூடி போட்டு எண்ணெய் பிரிய கொதிக்க வேண்டும். ரெண்டு நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு துண்டு வெல்லத்தை பொடித்து சேருங்கள். காரம், இனிப்பு, புளிப்பு என்று இந்த துவையல் ரொம்பவே சுவையாக இருக்கும். மீண்டும் மூடி போட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் மாவு இல்லாத சமயத்தில் தோசை சாப்பிடணும் நினைச்சா உடனே சட்டுனு இந்த பாசிப்பருப்பு தோசையை செஞ்சிடலாம். நல்ல காரசாரமா மொறு மொறு என்று சாப்பிட செம டேஸ்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இடையிடையே கிண்டி விட வேண்டும். கருப்பாக நிறம் மாறி சுண்டி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், சுவையான மல்லி துவையல் ரெடி! இதை ஏதாவது ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து நீங்கள் பிரிட்ஜில் வைத்து நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம். இட்லி, தோசை மட்டுமல்லாமல் வெரைட்டி ரைஸ் எல்லாத்துக்குமே தொட்டுக்க சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணுங்க.

- Advertisement -
Published by