வீட்டில் மாவு இல்லாத சமயத்தில் தோசை சாப்பிடணும் நினைச்சா உடனே சட்டுனு இந்த பாசிப்பருப்பு தோசையை செஞ்சிடலாம். நல்ல காரசாரமா மொறு மொறு என்று சாப்பிட செம டேஸ்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

pasi parupu dosai
- Advertisement -

இட்லி தோசை இந்த வகைகளில் இட்லி பிடிக்காதவர்கள் கூட ஒரு சிலர் இருப்பார்கள் ஆனால் தோசை பிடிக்காது என்று சொல்பவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு தோசை ரெசிபியை ரொம்பவே சுலபமாகவும் அதே நேரத்தில் சீக்கிரமாகவும் செய்வது எப்படி என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாகவே தோசை சாப்பிட வேண்டும் என்றால் அரிசி உளுந்து ஊற வைத்து அரைத்து அதை எட்டு மணி நேரம் புளிக்க வைத்து அதன் பிறகு தான் மாவை தயாரிக்க முடியும். பாசிப்பருப்பை வைத்து செய்யப்படும் இந்த தோசைக்கு நாம் அவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டியது இல்லை குறைந்த நேரத்தில் அதிக ருசியாக அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இந்த தோசையை செய்யலாம் வாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செய்முறை

இந்த தோசை செய்வதற்கு முதலில் இரண்டு கப் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிய பிறகு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஊறிய இந்த பருப்பை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் அரைக்க இரண்டு ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் மட்டும் ஊற்றி நல்ல கெட்டியான பதத்திற்கு மாவை அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் ஊற்றி கொள்ளுங்கள். இத்துடன் மேலும் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைக்கும் போதே அதிக தண்ணீர் ஊற்றினால் மாவு சீக்கிரம் அரைபடாது. அது மட்டும் இன்றி நீங்கள் மாவை எடுத்து வைப்பதாக இருந்தால் அதிக தண்ணீர் ஊற்றி அரைத்த மாவை எடுத்து வைக்க முடியாது மாவு நீர்த்து விடும். அதே போல ஒரு சிறிய கிணத்தில் ரெண்டு ஸ்பூன் மிளகாய் தூள் இதில் ஏற்றி கலக்க எண்ணெய் அல்லது நெய் ஏதாவது ஒன்றை ஊற்றி கலந்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானவுடன் மாவை எடுத்து நல்ல மெலிதாக தேய்த்து ஊற்றிய பிறகு நாம் ஏற்கனவே கலந்து வைத்த மிளகாய் தூள் எண்ணெய் சேர்ந்த பேஸ்ட்டை இதன் மேல் தேய்த்து விடுங்கள் தோசை நன்றாக வெந்தவுடன் திருப்பி போடாமல் அப்படியே எடுத்து பரிமாறலாம்.

இதையும் படிக்காலமே: சாம்பார் வச்சா இப்படித் தான் வைக்கணும்னு எல்லாரும் பாராட்டுற மாதிரி மணக்க மணக்க சூப்பரா சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?

இந்த தோசைக்கு எல்லா வகையான சட்னி சாம்பார் அனைத்தும் ருசியாகவே இருக்கும் எதுவும் இல்லாமல் வெறும் தோசை மட்டுமே சாப்பிட்டால் கூட அவ்வளவு பிரமாதமாக இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -