- Advertisement -
மற்றவை

100 வருடங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் எப்படி இருந்தது – வீடியோ

பழம் பெரும் நகரமான மதுரைக்கு நடுவே அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோயில். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோவிலாக விளங்குகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். பழமை மிக்க மதுரை நகரில் உள்ள சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் கோவில் 100 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்று கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -
தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

மதுரை நகரம் அமையப்பெற்றதற்கு பின் வரலாற்று கதைகள் பல உண்டு. குலசேகர பாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், கடம்பவனம் என்னும் காட்டை நகரமாக மாற்ற கூறியதாகவும், அதன் படி அம் மன்னன் மதுரை நகரை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. மதுரை மாநகரை உருவாக்கிய பிறகு சிவ பெருமான் அதற்கு ஆசி வழங்கியதாகவும் நம்பப்படுகிறது.

மதுரை கோவிலில் உள்ள மீனாட்சி அம்மனின் சன்னதியானது மற்ற கோவில்களை காட்டிலும் சிறப்பு பெற்றது. அம்மன் வீற்றிருக்கு கருவறையை 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கருவறையில் வீற்றிருக்கும் அம்மனின் கண்களானது மீன் போல அமையப்பெற்றதால் அந்த தாயாருக்கு மீனாட்சி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -