- Advertisement -
சமையல் குறிப்புகள்

மாவு அரைக்காமல் வெறும் 5 நிமிடத்தில் இந்த குட்டி குட்டி போண்டாவை எப்படிங்க செய்ய முடியும்! உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?

வெறும் ஐந்து நிமிடத்தில் இந்த மாவை நாம் தயார் செய்து விடலாம். ஆனால் 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்புதான் குட்டிக்குட்டி போண்டாவை சுட்டு எடுக்க முடியும். மினி மைசூர் போண்டா என்று சொல்லுவார்கள். இதை சிலர் ரோட்டு கடைகளில் வாங்கி சுவைத்திருக்க முடியும். மாவு அரைக்காமல் இன்ஸ்டன்டாக எந்தெந்த பொருட்களை சேர்த்து சுவையான இந்த போண்டாவை தயார் செய்வது. மேலே பார்ப்பதற்கு மொரு மொரு சுவையிலும், உள்ளே சாஃப்டாவும், கடித்து சாப்பிட அத்தனை அற்புதமாக இருக்கும்‌. சரி லேட் பண்ணாம ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு – 1 கப், மைதா மாவு – 1/2 கப், உப்பு தேவையான அளவு உப்பு, சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 அல்லது 3, சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு, தயிர் – 3/4 கப், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கட்டி படாமல் கரைத்துவிட வேண்டும்.

- Advertisement -

இந்த மாவை கரைக்க தயிர் மட்டும் போதாது. தேவையான அளவு தண்ணீரை விட்டு, இதை போண்டா மாவு பக்குவத்திற்கு கரைத்துக் கொள்ளவேண்டும். இந்த மாவு ரொம்பவும் கட்டியாகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் தனியாகவும் இருக்கக்கூடாது. கையில் அல்லி சிறிய சிறிய உருண்டைகளாக போடும் அளவிற்கு இதனுடைய பக்குவம் இருக்க வேண்டும்‌‌. சரியாக சொல்லபோனால் இட்லி மாவு பக்குவத்திற்கு.

ஒரு மூடி போட்டு 20 லிருந்து 30 நிமிடங்கள் கரைத்த மாவை அப்படியே ஊற விட்டு விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து இந்த மாவில் 1/2 ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக ஒரு கரண்டியை வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கலந்துவிட வேண்டும். அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த போண்டா மாவை உங்கள் கையாலேயே எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான். இதைப் பொரித்து எடுக்கும் போதே நமக்கு ஒரு நல்ல வாசம் வீசும். அந்த வாசமே இந்த போண்டாவை சாப்பிடத் தூண்டும். ரொம்பவும் பெரிய போண்டா வாக விடவேண்டாம். உள்ளே வேகாத பக்குவத்தில் வந்து விடும்.

ஈவினிங் டீ டைம் ஸ்நாக்ஸாக இதை செய்யலாம். குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தேங்காய் சட்னி, காரச் சட்னி, இப்படி எந்த சட்னியை வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -