- Advertisement -
இன்றைய செய்திகள்

குன்றத்தில் அடுத்தடுத்து மரணிக்கும் குரங்குகள்! காரணம் என்ன?

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றத்தில் நடந்துவரும் சோகம். முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மற்றும் தென்பரங்குன்றம் ஆகிய இடங்களில் இருக்கும் மலைகளிலும், மலைக்குப் போகும் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில், மலைமீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில் கல்வெட்டுக்கு அருகிலிருக்கும் குடைவரை கோவில்களிலும் ஆயிரக்கணக்கான குரங்குகள் தங்கியிருக்கும். இந்த குரங்குகளுக்கு திடீரென்று ஏற்பட்ட பரிதாப சூழ்நிலை என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் வசித்து வரும் குரங்குகள் திடீரென்று கடந்த சில நாட்களாக இறந்து வருவதாக, கோவில் அருகில் குடியிருக்கும் மக்கள், காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். இங்கு வசிக்கும் குரங்குகளுக்கு உணவு என்பது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுப்பதுதான். ஊரடங்கு கட்டுப்பாட்டினால் கோவிலுக்கு பக்தர்களின் வருகை இல்லை. ஆகவே குரங்குகளுக்கு உணவு சரிவர கிடைக்கவில்லை.

- Advertisement -

இருந்தாலும், குரங்குகளுக்கு சரியான உணவு கிடைக்காததை அறிந்து கொண்ட சில தன்னார்வ குழுக்கள், அந்த குரங்குகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை தங்களால் முடிந்தவரை கொடுத்து வந்தனர். தொட்டிகளில் தண்ணீரையும் நிரப்பி வைத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் திருப்பரங்குன்ற மலை பகுதிகளில் வசித்து வரும் குரங்குகள் அடுத்தடுத்து இறந்து வருவது, அந்த ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

குரங்குகள் தொடர்ச்சியாக உயிரிழக்க காரணம் என்னவாக இருக்கும், என்ற சந்தேகம் பலருக்கு பலவகையில் எழுந்துள்ளது! இந்த குரங்குகள் உயிர் இழப்பதற்கு உணவு இல்லாததுதான் உண்மையான காரணமா? அல்லது கொரானா நோய்தொற்று காரணமாக இருக்குமா? என்ற சந்தேகத்தில் அந்த பகுதியில் உள்ள அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

இங்கு உள்ள குரங்குகளை காப்பாற்ற வனத்துறை தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், குரங்குகள் இறந்ததற்க்கு உண்மையான காரணம் என்ன என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அந்த ஊர் பொதுமக்கள் வனத்துறையினரடமும், காவல்துறையினர் இடமும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

- Advertisement -
Published by