- Advertisement -

எதிர்பாராத நன்மைகள் ஏற்பட மூன்றாம் பிறை தரிசனம்

- Advertisement -

சிவபெருமானே தன்னுடைய தலையின் மேல் சூடிக்கொண்டிருக்கின்ற மூன்றாம் பிறையை நாம் ஒவ்வொரு மாதமும் தரிசனம் செய்யும் பொழுது சிவபெருமானை தரிசனம் செய்வதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அந்த மூன்றாம் பிறை சந்திரனை நாம் தரிசனம் செய்யும் பொழுது சந்திரமௌலீஸ்வர் உடைய மந்திரத்தை கூற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சந்திர தரிசனம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. அதுவும் நவராத்திரி சமயத்தில் வருவது கூடுதல் சிறப்பு. இந்த அதி அற்புதமான நாளன்று நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

எதிர்பாராத நன்மைகள் ஏற்பட மூன்றாம் பிறை தரிசனம்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்த இரண்டாவது நாள் மூன்றாம் பிறை என்பது வரும். இந்த மூன்றாம் பிறை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான பலனை தரும். கையில் நாணயத்தை வைத்துக்கொண்டு இந்த மூன்றாம் பிறையை தரிசனம் செய்பவர்களுக்கு செல்வம் பல மடங்கு வளர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் பலவிதமான வழிபாட்டு முறைகளையும் நாம் இந்த மூன்றாம் பிறையை தரிசனம் செய்துவிட்டு செய்வோம். வெள்ளிக்கிழமையுடனும் நவராத்திரியின் இரண்டாம் நாளும் சேர்ந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத மூன்றாம் பிறை என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயாரையும் சந்திர பகவானையும் வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

சந்திர பகவானும் மகாலட்சுமி தாயாரும் சகோதர சகோதரிகளாக கருதப்படுகிறார்கள். அதனால் தான் பௌர்ணமி தினத்திலும் மூன்றாம் பிறை சமயத்திலும் நாம் சந்திரனை வழிபாடு செய்வதோடு மகாலஷ்மி தாயாரையும் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை என்பதால் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பை வாங்க வேண்டும். பிறகு 7 மணியிலிருந்து 10:30 மணிக்குள் தங்களால் இயலும் பட்சத்தில் வெள்ளி பொருள் ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும். அப்படி வெள்ளி பொருள் வாங்க இயலாது என்று நினைப்பவர்கள் தயிரை வாங்கி வரலாம்.

தயிரும் கல்லுப்பும் சுக்கிரனின் அம்சம் பொருந்தியதாக திகழ்கிறது. கல்லுப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு அதற்கு மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து விடுங்கள். இதே போல் தயிரையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றி மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குத்துவிளக்கை எடுத்து அதில் மல்லிகை பூவை சூட்டி மகாலட்சுமி ஆக பாவித்து மகாலட்சுமியின் போற்றிகளை கூற வேண்டும். மகாலட்சுமி அஷ்டகம் கூறலாம். அல்லது “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே” என்னும் மந்திரத்தை 111 முறை கூற வேண்டும்

- Advertisement -

இந்த கல்லுப்பும் தயிரும் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். இந்த தயிரை இரவு படுக்க செல்வதற்கு முன் முகத்தில் தடவிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவவோ அல்லது குளித்து விட்டோ உறங்கலாம். இப்படி செய்வதன் மூலம் முகவசியம் ஏற்படும். தனவசியம் ஏற்படும். சுக்கிரனின் ஆற்றல் பரிபூரணமாக கிடைக்கும். மறுநாள் காலையில் பூஜையறையில் வைத்த கல் உப்பை எடுத்து சமைப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பணம் நகை வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். இதை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம். ஆண்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து கொள்வதும் பெண்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டும் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது பரிபூரணமான பலன் கிடைக்கும்.

மாலை நேரத்தில் மூன்றாம் பிறையை தரிசனம் செய்வது என்பது சிறப்பு அவ்வாறு தரிசனம் செய்தோம் என்றால் நவசக்தி சந்திரனை தரிசனம் செய்ததற்கு சமமாக கருதப்படுகிறது. இந்த சந்திர தரிசனத்தை செய்யும் பொழுது “ஓம் சந்திர தேவாய நமோ நம” என்ற மந்திரத்தையும் “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமோ நம” என்னும் மந்திரத்தையும் 27 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் எதிர்பாராத நன்மைகள் நம் வாழ்வில் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே:மூன்றாம் பிறையுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறை

சக்தி வாய்ந்த இந்த வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்தை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் பல நன்மைகளை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -