- Advertisement -

தீராத பழிச்சொல்லை நீக்கும் முருகன் வழிபாடு

- Advertisement -

நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலுக்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் ஒரு சிலரது வாழ்க்கையில் அவர்கள் செய்யாத செயலுக்காக அவமானங்களையும் அசிங்கங்களையும் சந்தித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களால் அவர்களுக்கு ஏற்பட்ட பழிச்சொல்லை நீக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். அப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு முருகப்பெருமானை எந்த நாளில் எந்த மாலையை சாற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகன் வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தீர்ப்பதற்கு ஒவ்வொரு விதமான தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கத்தில் நாம் இருப்போம். அதிலும் பொதுவாக குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். இதோடு நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்வதற்குரிய தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். அந்த வகையில் நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய அவமானங்களும் அசிங்கங்களும் பழிச் சொல்லும் நீங்க வேண்டும் என்றால் அதற்கு உதவி செய்யக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது 54 எண்ணிக்கையில் இருக்கக்கூடிய வெற்றிலைகளை வாங்கி வெள்ளை நிற நூலால் மாலையாக கட்டி எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கு அதை சாற்றச் சொல்லி தர வேண்டும்.

பிறகு முருகப்பெருமானுக்கு ஆறு என்ற எண்ணிக்கையில் தீபத்தை ஏற்றி வைத்து முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து கோவிலின் ஒரு பக்கமாக அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு “ஓம் சரவணபவ” என்னும் முருகனின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய அவமானங்களையும் அசிங்கங்களையும் பழிச்சொல்லும் தீர வேண்டும் என்று முருகப்பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்ய நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய தீராத பழிச் சொல்லும் தீரும். அவமானங்களும் அசிங்கங்களும் மறையும் என்று கூறப்படுகிறது. அருகில் முருகன் ஆலயம் இல்லை என்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் படத்திற்கோ அல்லது சிலைக்கோ இந்த மாலையை சாற்றி ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். மறுநாள் இந்த மாலையை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் மந்திரம்

மிகவும் எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பழிச் சொல்லும், அவமானங்களும், அசிங்கங்களும் முருகப்பெருமானின் அருளால் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -