- Advertisement -
Homeமந்திரம்சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் மந்திரம்

சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் மந்திரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விதமான கஷ்டங்களுக்கும் காரண கர்த்தாவாக திகழக்கூடியது அவர்களுடைய கர்ம வினைகள் தான். யார் ஒருவருடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் குறைந்து கொண்டே வரும் என்றுதான் கூறப்படுகிறது. கர்ம வினைகள் குறைவதற்கு பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு வழிமுறையாக திகழ்வதுதான் சக்கரத்தாழ்வார் வழிபாடு. சக்கரத்தாழ்வாரின் இந்த ஒரு மந்திரத்தை தினமும் கூறுபவர்களுக்கு அவர்களுடைய கர்ம வினைகள் குறைவதோடு, கஷ்டங்களும், சங்கடங்களும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சக்கரத்தாழ்வார் மந்திரம்

திருமாலின் கையில் இருக்கக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் சக்கரம். சக்கரத்திற்கு ஆழ்வார் பட்டத்தை கொடுத்து சக்கரத்தாழ்வார் என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு இன்னும் வேறு பெயர்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பெருமாளின் ஆலையத்திலும் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனியாக சன்னதி இருக்கிறது. ஒரு சில இடங்களில் 16 கரங்களைக் கொண்டவராக சக்கரத்தாழ்வார் திகழ்கிறார். ஒரு சில இடங்களில் 32 கரங்களைக் கொண்டவராகவும் திகழ்கிறார். ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் எப்படி தீமையை அளிக்க வல்லவரோ அதே போல் அவரை வழிபாடு செய்யும்பொழுது அவருடைய பக்தர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீமைகளையும் அவர் அழித்து அந்த பக்தர்களை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. இவருக்கு மிகவும் உகந்த கிழமையாக திகழ்வது வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் தான். இந்த இரண்டு நாட்களிலும் நாம் அருகில் இருக்கக்கூடிய பெருமாளின் ஆலயத்திற்கு சென்று சக்கரத்தாழ்வாருக்கு துளசிமாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வைத்து பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது என்பது நல்ல பலனைத் தரும்.

இதையும் தவிர்த்து சக்கரத்தாழ்வாருக்கு என்று மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை வீட்டு பூஜை அறையில் தினமும் ஒருமுறை கூறி சக்கரத்தாழ்வாரை மனதார வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய
பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி

ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய
மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே
ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபனா
கராய ஹூம்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

- Advertisement -

இந்த மந்திரத்தை தினமும் ஒரு முறை கூறி வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய பயம் நீங்கும், தோஷங்கள் விலகும், எப்பேர்பட்ட துன்பமாக இருந்தாலும் அந்த துன்பங்களும் நீங்கும். பிரச்சனைகள் படிப்படியாக விலகும், நமக்கு வரக்கூடிய ஆபத்துகள் ஒன்றும் இல்லாமல் போகும், எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் நமக்கு எந்தவித தீமைகளும் ஏற்படாமல் சக்கரத்தாழ்வார் நம்மை காப்பாற்றுவார். மகாலட்சுமியின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:சஷ்டி விரதம் முதல் நாள் செய்ய வேண்டியது

இந்த மந்திரத்தை முழுமனதோடு சக்கரத்தாழ்வாரை நினைத்து தினமும் ஒரு முறை கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்