
கடன் தொல்லையில் இருந்து வெளி வர எவ்வளவு போராட்டங்கள். எவ்வளவு போராடினாலும் கடன் பிரச்சனை முடிந்த பாடாக இல்லை. பழைய கடனை இந்த மாதம் திருப்பிக் கொடுத்தால், இந்த மாதம் வாங்கிய புதிய கடனுக்கு அடுத்த மாதம் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை. இப்படித்தான் நம்முடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
கடன் வாங்காமல் இருந்தாலே வரக்கூடிய வருமானத்தை வைத்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாம். ஆனால் கடனையும் வாங்காமல் இருக்க முடியவில்லை. வருமானத்திற்கு, அதிகமாகத்தான் செலவாகிறது. இந்த பிரச்சனைக்கு எப்படி தான் முடிவு கட்டுவது. கடினமாக உழைக்க வேண்டும். குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் எப்படி எல்லாம் பணம் சம்பாதிப்பது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
நிச்சயமாக உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். இது தவிர ஒரு சில சக்தி வாய்ந்த நாளில் நீங்கள் செய்யும் பரிகாரம் உங்களுடைய பணக்கஷ்டத்தை குறைக்கும் என்கிறது நம்முடைய சாஸ்திரம்.
நாளைய தினம் வெள்ளிக்கிழமையில் பௌர்ணமியும் சேர்ந்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட நாட்களில் பிரபஞ்சத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் அல்லவா. நாளை நீங்கள் செய்யக்கூடிய பரிகாரங்கள் வேண்டுதல்கள் உங்களுக்கு பல மடங்கு பலனை கொடுக்கும். அந்த வகையில் கடன் தீர்க்க ஒரு எளிமையான ஆன்மீகம் பரிகாரத்தை பார்த்து விடுவோம்.
வசம்பு ரொம்ப ரொம்ப வசிய தன்மை கொண்ட பொருள். நாளை மாலை உங்கள் வீட்டில் நிலவு உதயமாக கூடிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சந்திர பகவானை பார்த்தவாறு உள்ளங்கைகள் இரண்டையும் ஏந்திக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளுக்கு நடுவே ஒரு வசம்பு இருக்கட்டும். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பிறகு சந்திர பகவானே என்னுடைய கடன் சுமையை குறைத்து விடு, மன பாரத்தை குறைத்து விடு, என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இன்னும் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எது இருந்தாலும் அதை சந்திர பகவானிடம் சொல்லி வேண்டுதல் வையுங்கள். பிறகு ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். அந்த வசம்பில் நிலவு வெளிச்சம் கொஞ்ச நேரம் படட்டும்.
அப்படியே கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் வெட்டவெளியில் அமர்ந்தோ, நின்றோ இந்த பிரார்த்தனையை செய்து விட்டு பிறகு கையில் இருக்கும் வசம்பை கொண்டு வந்து உங்கள் வீட்டு உப்பு ஜாடிக்குள் போட்டு வையுங்கள். உப்பு ஜாடிக்குள் அடியில் இந்த வசம்பை வைத்து விடலாம். எப்போதும் போல நீங்கள் அந்த கல்லுப்பை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
வசம்பு எளிதில் கெட்டுப் போகாது உங்கள் வேண்டுதல் நிறைவேறும் வரை அந்த வசம்பை உப்பு ஜாடையில் இருந்து எடுக்காதீங்க. நாளைய தினம் இந்த முறைப்படி வேண்டி வசம்பை, கல் உப்பு ஜாடையில் வைத்தால் உங்களுடைய கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. மற்ற வேண்டுதல்களும் சீக்கிரம் பலிக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு
ஒரு வருடம் கழித்து கூட அந்த வசம்பை எடுத்து கால் படாத இடத்தில் போடலாம். நாளைய தினம் முடிந்தால், வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வீட்டு பெண்கள் வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.