- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு

கடன் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு

- Advertisement -

“செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா” என்னும் பாடல் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். கர்ணனை நினைத்து கிருஷ்ண பரமாத்மா கூறிய வரிகளாக இந்த வரிகள் திகழ்கிறது. பசி அறிந்து சாப்பாடு போட்டவர்களின் கடனை தீர்ப்பதற்காக அவர்கள் கெட்டவராக இருந்தாலும் சரி அவர்களுடன் சேர்ந்து யுத்தம் புரிந்தார் கர்ணர் என்பது பலரும் அறிந்தது தான். நம்மில் பலரும் கடன் என்றதும் பணத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் ஒருவர் பசியாற சாப்பாடு போட்டாலும் அதுவும் ஒரு வகையில் கடனாக தான் கருதப்படுகிறது. நன்றி கடன், செஞ்சோற்று கடன், பணக்கடன், நகைக்கடன் இப்படி பல வகைகளிலும் நமக்கு கடன்கள் என்பது ஏற்படும். இந்த கடன்கள் அனைத்தையும் நாம் முழுமையாக தீர்த்தால்தான் இந்த பிறவி முழுமையடையும் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி அனைத்து விதமான கடன்களையும் தீர்ப்பதற்குரிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் நரசிம்மர். நரசிம்மரை எந்த முறையில் நாம் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கடன்களும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு

நாளை என்ற பேச்சுக்கே இடம் இல்லாதவர் ஆக திகழ்பவர் தான் நரசிம்மர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் நரசிம்மர். ஒன்றே ஒன்றுதான் முழு மனதுடன் அவரை நாம் சரணாகதி அடைய வேண்டும். இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் நம்முடைய வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு நன்மைகளை தரக்கூடியவராக நரசிம்மர் திகழ்கிறார்.

அப்படிப்பட்ட நரசிம்மருக்கு கடன் தீர வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் உகந்த கிழமையாக திகழ்கிறது. அதேபோல் சுவாதி நட்சத்திரம் மிகவும் உகந்த நட்சத்திரமாக திகழ்கிறது. இந்த நரசிம்மர் வழிபாட்டை ஆரம்பிக்கும் கிழமை ஆனது செவ்வாய்க்கிழமையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சுவாதி நட்சத்திர நாள் அன்றும் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கலாம். இந்த இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நாளாக இருந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

நரசிம்மர் வழிபாட்டை நாம் நித்திய பிரதோஷ வேளையில்தான் செய்ய வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் அவர் அவதரித்தார். நித்திய பிரதோஷ வேளை என்பது மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் தினமும் வரக்கூடிய நேரத்தை தான் கூறுகிறோம். அந்த நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மர் படத்திற்கு சுத்தம் செய்த அவருக்கு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நரசிம்மர் கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி பாராயணம் செய்யும்பொழுது நரசிம்மருக்கு நெய்வேத்தியமாக பானகத்தை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் நரசிம்மர் கவசத்தை பாராயணம் செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கடன்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய இயலாது என்பவர்கள் செவ்வாய்க்கிழமை தூரம் இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நாள் அன்றும் இந்த வழிபாட்டை செய்யலாம். இயன்றவர்கள் சுவாதி நட்சத்திர நாள் அன்று அருகில் இருக்கக்கூடிய நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு பானகத்தை நெய்வேதியமாக படைத்த அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ ஆனி மாத பௌர்ணமி வழிபாடு

அதிசக்தி வாய்ந்த தெய்வமாக திகழக்கூடிய நரசிம்மரை இந்த முறையில் நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கடன்களையும் நீக்கி மறுபிறவியற்ற நிலையை ஏற்படுத்துவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்