
உக்கிரமான தெய்வமாக திகழக்கூடியவர் நரசிம்மர். இருப்பினும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அந்த கனமே அருள் புரிபவரும் நரசிம்மர் தான். யார் ஒருவர் முழு மனதுடன் நரசிம்மரை வணங்குகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய வல்லமை படைத்த தெய்வமாக திகழக்கூடியவர் நரசிம்ம பெருமாள். அப்படிப்பட்ட நரசிம்மரை எந்த முறையில் வழிபட்டால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும், நினைத்தது நடக்கும், செல்வம் சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நரசிம்மரின் வரலாறு என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய பக்தன் தன்னை நம்பி அழைத்த உடனேயே தூணிலிருந்து வெளிப்பட்டு தன்னுடைய பக்தனுக்கு கஷ்டத்தை கொடுத்தவரை அழித்த தெய்வமாக நரசிம்மர் திகழ்கிறார். அப்படிப்பட்ட நரசிம்மரை நாம் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், உக்கிர நரசிம்மர் என்று கூறுவோம்.
ஒவ்வொரு நரசிம்மருக்கும் ஒவ்வொரு விதமான பண்புகள் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொரு விதமான நரசிம்மரை நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. வீட்டில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் லட்சுமி நரசிம்மரையும், யோக நரசிம்மரையும் வைக்கலாம். உக்கிர நரசிம்மரை வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
தினமும் லெட்சுமி நரசிம்மரை நாம் வழிபடும் பொழுது செல்வம் அதிகரிக்கும். மேலும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவும். வேண்டுதல் நிறைவேறவும் நாம் சாந்தரூபத்தில் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்யலாம். நினைத்த காரியம் கடவுளின் அருளால் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று நினைப்பவர்கள் யோக நரசிம்மரை வழிபாடு செய்யலாம். பிரச்சனைகள் தீர வேண்டும், கஷ்டங்கள் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் உக்கிர நரசிம்மரை வழிபாடு செய்யலாம்.
இப்படி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஏற்றவாறு நாம் நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாகவே நரசிம்மரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையிலும், தொழில் துறையிலும் நமக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். நமக்கு கஷ்டங்கள் கொடுத்தவர்கள் நம்மை விட்டு விலகி செல்வார்கள். பய உணர்வு நீங்கும். குறைகள் அற்ற நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.
வீட்டில் லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக நாம் வழிபாடு செய்யலாம். நரசிம்மரின் படம் இல்லை என்பவர்கள் ஒரு சிறிய தாம்பாளத்தில் அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி அந்த தீபத்தில் நரசிம்மரை ஆவாகனம் செய்து வழிபாடு செய்யலாம். இதற்கு நமக்கு அட்சத்தையும் மலர்களும் இருந்தால் போதும்.
சிறிது பச்சரிசியில் மஞ்சளை கலந்து அட்சதையாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் உதிரி மலர்களை சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது நம்முடைய பிரச்சனை என்னவோ அந்த பிரச்சனைக்குரிய நரசிம்மரின் 108 போற்றிகளை கூற வேண்டும். உதாரணமாக செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் “ஓம் லக்ஷ்மி நரசிம்மரே நமஹ” என்று 108 முறை கூறவேண்டும். இதே போல் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் “ஓம் யோக நரசிம்மரே நமஹ” என்றும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், கஷ்டங்கள், கடன் ஒழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் “ஓம் உக்கிர நரசிம்மரே நமஹ” என்று 108 முறை கூற வேண்டும்.
நாம் இந்த மந்திரத்தை கூறும்போது நம்முடைய கையில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் அட்சத்தையும் மலரும் வைத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் தீருவதற்காக உக்கிர நரசிம்மரை நாம் வழிபாடு செய்கிறோம் என்றால் அந்த தீபத்திற்கு முன்பாக ஒரு சிறிய செம்பில் நல்ல தண்ணீரைப் பிடித்து வைத்து கையில் இந்த அச்சதையை வைத்துக்கொண்டு 108 முறை மந்திரத்தை கூறிவிட்டு இந்த அட்சதையை அப்படியே அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
இதுவே லட்சுமி நரசிம்மரையோ அல்லது யோக நரசிம்மரையோ நாம் வழிபடும் பொழுது அந்த அட்சதையையும் மலரையும் கையில் வைத்துக்கொண்டு வழிபாடு செய்துவிட்டு, நம் உடனையே எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி நரசிம்மரை மனதார நினைத்து வழிபாடு செய்து விட்டு அட்சதை மற்றும் மலர்களை நம்முடன் எடுத்துச் செல்லும் பொழுது அந்த நரசிம்மரை நம்முடன் வருவதாக ஐதீகம். மேலும் நம்முடன் வருவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய காரியங்கள் வெற்றி அடைவதற்கும், நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரவும் அவர் அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:எதிரி தொல்லையிலிருந்து விடுபட அஷ்டமி வழிபாடு
வெறும் அட்சதை மற்றும் மலர்களை வைத்து இந்த எளிமையான நரசிம்மர் வழிபாட்டை செய்பவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும், கஷ்டங்கள் நீங்கும், நினைத்தது நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்