
எல்லா தடைகளையும் தீர்க்கக் கூடிய வல்லமை கொண்ட கடவுள் விநாயகர். பணத்தடையையும் நீக்கக்கூடிய சக்தி இந்த விநாயகருக்கு இருக்கிறது. பிள்ளையாரை மனதார நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய வீட்டில், பல மடங்கு பண வரவு இருக்கும். மிக மிக எளிமையான பரிகாரம் தான். வெள்ளிக்கிழமை உங்க வீட்டு வடக்கு திசையில், இந்த ஒரு பொருளை மட்டும் வச்சு பாருங்க. அளவில்லா அதிர்ஷ்ட காற்று உங்கள் வீட்டுப் பக்கம் வீசத் தொடங்கி விடும்.
சிரமம் பார்க்காமல் இந்த நான்கு ரூபாய் நோட்டுகளை மட்டும் கொஞ்சம் தேடி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நோட்டில் எண்கள் பின் சொல்லக்கூடிய மூன்று எண்களைக் கொண்டு முடிய வேண்டும். 786, 520, 808, 741, ரூபாய் நோட்டில் நம்பர் இருக்கும் அல்லவா. அந்த நம்பர் முடியும் போது இந்த 3 எண்கள் இருக்க வேண்டும். மொத்தம் நான்கு நோட்டுகள் உங்களுக்கு தேவை.
786 இல் ஒரு நோட்டு, 520 என்ற எண் முடியும் படி ஒரு நோட்டு, 808 என்ற எண் முடியும் படி ஒரு நோட்டு, 741 என்ற எண் முடியும் படியான நோட்டு, இந்த நான்கு நோட்டுகளை சேகரிப்பதில் மட்டும்தான் உங்களுக்கு சிரமம் இருக்கிறது. இது 500 ரூபாய் நோட்டாக கிடைத்தாலும் சரி, 100 ரூபாய் நோட்டாக கிடைத்தாலும் சரி, அது உங்களுடைய சவுகரியம்.
ஒரு அகலமான கண்ணாடி பௌலில் வெண்கடுகை நிரப்பிக் கொள்ளுங்கள். மேலே சொன்ன எண்களை கொண்ட நோட்டை சுருட்டி அந்த வெண்கடுகில் சொருகி வைத்து விட வேண்டும். இந்த கிண்ணத்தை அப்படியே உங்களுடைய வீட்டு வடக்கு திசையில், வைத்து விடுங்கள். இந்த பவுல் அங்கேயே இருக்கட்டும். இந்த பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. வெண் கடுகு ரொம்பவும் தூசியான பிறகு அந்த வெண்கடுகை எல்லாம் எடுத்து, கால் படாத இடத்தில் கொட்டி விட்டு புதிய வெண்கடுகு சேர்க்கலாம். 6 மாதத்திற்கு ஒரு முறை இதை செய்தால் கூட போதும்.
வடக்கு திசையில் வெண்கடுகோடு இந்த பணமும் சேர்ந்து இருக்கும் போது உங்களுடைய பணகஷ்டம் வீட்டில் குறையும். உங்க கையில் இருக்கும் பணத்தில் திருஷ்டி எதுவும் விழாது. அது மட்டும் அல்லாமல் உங்களை விட்டு நஷ்டமாகி சென்ற பணம் எல்லாம் திரும்பவும் உங்கள் கையை வந்து சேரும் என்பது நம்பிக்கை. பிள்ளையாரை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: நகை சேர ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்
முடிந்தால் இந்த கிண்ணத்துக்கு பக்கத்தில் சின்னதாக ஒரு பிள்ளையார் சிலையை வைத்தாலும் தவறு கிடையாது. அது உங்களுடைய சௌகரியத்தை பொறுத்தது. முக்கியமான விஷயம் வெண்கடுகும் நீங்கள் வைக்கப் போகும் அந்த நோட்டும், நோட்டில் இருக்கும் எண்களும் தான். நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை செய்தால் நீங்க பணக்காரராகும் யோகம் சீக்கிரம் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்து பார்க்கவும்.