நாம் எல்லோருக்குமே நகை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் தங்க நகையை சாமானிய மனிதர்களால் வாங்க முடியவில்லை. தங்கம் இருக்கும் விலைக்கு, இருக்கின்ற நகையை பாதுகாத்து வைத்தால் போதும். புதுநகை வாங்குக வேண்டாம் என்ற எண்ணமும் சில பேருக்கு இருக்கிறது.
உங்களிடம் இருக்கும் நகை பத்திரமாக அடகுக்கு போகாமல், விற்கப்படாமல், உங்களிடமே இருக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது திருமணம் காதுகுத்து, பெண் பிள்ளைகளுக்கு நகை சேர்க்க போகிறீர்கள் என்றாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயம் தங்கம் வாங்குவதற்கான யோகமும் பணமும் உங்களைத் தேடி வரும்.
நகை சேர ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்து முடிக்கும் வரை உங்களுடைய வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும். பரிகாரத்தை செய்து முடித்த பிறகு தேவை என்றால் நீங்கள் அசைவம் சாப்பிட்டு கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முன்பு நீங்கள் குளித்து விட வேண்டும்.
சூரிய உதயத்தின் போது சூரியனுக்கு நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் வந்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சின்ன கண்ணாடி பவுலில் உங்கள் கையால் கோதுமையை போட வேண்டும். குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிண்ணத்தில் கோதுமையை போடுங்கள். 27 முறை குல தெய்வத்தைச் சொல்லி, 27 முறை அந்த கிண்ணத்தில் கோதுமையை போட்டு, அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
பிறகு தங்கம் சேர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எப்பவும் போல விளக்கு ஏற்றி ஊதுவத்தி காண்பித்து, கற்பூர ஆரத்தி காண்பித்து, உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இப்படி கோதுமையை பூஜையறையில் வைத்து குலதெய்வத்தின் நாமத்தைச் சொல்லி வேண்டுதல் வைத்தால், தங்கம் வாங்க கூடிய யோகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படி செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் இந்த கோதுமையை எல்லாம் தனியாக ஒரு டப்பாவில் சேகரித்துக் கொண்டே வாருங்கள். கோதுமை ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் அளவுக்கு வந்த பிறகு அதை ஒன்றும் இரண்டுமாக நுணுக்கி அரைத்து பாயாசம் செய்து அன்னதானம் செய்து விட வேண்டும் அவ்வளவுதான் பரிகாரம். (இதை பாயாசம் செய்ய முடியாது என்பவர்கள், இந்த கோதுமையை அப்படியே யாருக்காவது முழு கோதுமையாகவும் தானம் கொடுக்கலாம் ஆனால் பாயசம் செய்து தானம் கொடுப்பதை முதன்மையான பலனை கொடுக்கும்.)
இதையும் படிக்கலாமே: போராட்டம் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்
பார்ப்பதற்கு இந்த பரிகாரம் ரொம்ப ரொம்ப சுலபமான பரிகாரமாக இருக்கலாம். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரம் இது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையில் குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் தங்கம் தங்கும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். மூன்று மாதம் இந்த பரிகாரத்தை செய்யும் போதே, உங்களுடைய வீட்டிற்குள் தங்கம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கி விடும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.