- Advertisement -

பிரமிடுக்குள் ஐம்பொன் நடராஜர் சிலை – வெளியே காவலுக்கு நந்தி

எகிப்திய பிரமிடுகளை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதுகுறித்த பல ஆய்வுகளுக்கு இன்று வரை விடை தெரியாமலே உள்ளது. அதே போல உலகையே அறிவியல் ரீதியாக வியப்பில் ஆழ்த்த கூடிய ஒரு சிலை என்றால் அது நடராஜர் சிலை தான். ஜெனிவாவில் உள்ள ஒரு மிகப்பெரிய ஆய்வு மையத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டிருப்பதில் இருந்து அதில் ஒளிந்துள்ள அறிவியலை நாம் புரிந்துகொள்ளலாம்.

இப்படி இரண்டு மிகப்பெரிய அதிசயங்களை ஒன்று சேர்க்கும் விதமாக பிரமிடுக்குள் ஐம்பொன்னால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உட்பட பல சிலைகள் கொண்ட ஒரு கோவில் உள்ளது. அது தான் அருள் மிகு காரணேஸ்வர நடராஜர் கோவில். சென்னை கடற்கரை சாலையில் உள்ள புதுகுப்பம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த பிரமிடு நடராஜர் கோவில்.

- Advertisement -

தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களின் அமைப்பை போல அல்லாமல் இந்த கோவில் எகிப்தில் உள்ள பிரமிடு வடிவில், `50 டிகிரி 51 இஞ்ச்’ கோண அளவில் கட்சிதமாக கட்டப்பட்டுள்ளது. பிரபஞ்ச நடன கோலத்தில் நடராஜர் இங்கு கருவறையில் காட்சி தருகிறார். அதோடு இந்த கோவிலில் கயிலாசபதி லிங்கமும், சிவகாமி அம்மையும், முருகன் மற்றும் விநாயகர் சிலையும் உள்ளது. கோயிலிற்கு வெளியே ஒரு அற்புதமான சிவ லிங்கமும் நந்தி சிலையும் உள்ளது.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி தன் வசம் ஈர்க்கும் சக்தி பிரமிடுக்கு உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகையால் எவர் ஒருவர் பிரமிடுக்குள் தியானம் செய்தாலும் அந்த தியானத்தின் பலன்களை பன் மடங்கு பெற முடியும். இந்த பிரமிடு கோவிலுக்குள் பலர் வந்து தியானம் செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு எளிதில் மனம் ஒருமுகப்படுகிறது என்றும், மன அமைதி கிடைக்கிறது என்றும் பலர் கூறுகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி

English overview:

Karaneswara Natrajar temple is very famous pyramid Natrajar temple located near Pondichery. This temple was constructed like pyramid and inside temple there is iympom natarajar statue. Apart from that there is Murugan and Vinayagar statue too.

- Advertisement -