கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி

kothikkum-ennai
- Advertisement -

பொதுவாக பக்தர்கள் பலர் மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை நோக்கி விரதம் இருந்து இரவு கண் விழித்து வழிபடுவது வழக்கம். ஆனால் ஸ்ரீவல்லிபுத்தூரை சேர்ந்த ஒரு மூதாட்டி தொடர்ந்து 49 ஆண்டுகளாக மகா சிவராத்திரி அன்று கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு அதை காளி தேவிக்கு படைத்தது வருகிறார்.

Muthammaal patti

கடந்த 13 ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவின்போது நள்ளிரவு 12 மணி அளவில் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு அப்பம் சுடும் நிகழ்வு தொடங்கியது. வருடா வருடம் இந்த அதிசய நிகழ்வு நடப்பதால் பக்தர்கள் பலர் அங்கு கூடுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் பக்தர்கள் ஏராளமாக கூடினர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
காது குத்துவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

அப்பம் சுடுவதற்காக பக்தர்கள் வழங்கிய நெய் சட்டியில் ஊற்றப்பட்டு சூடாக்கப்பட்டது. பின்னர் முத்தம்மாள் பாட்டி (வயது 87) கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட தொடங்கினார். அதோடு கொதிக்கும் நெய்யை தன் கைகளிலும் பூசிக்கொண்டு பார்ப்பவர்களை பக்தி பரவசம் அடைய செய்தார். விடியற்காலை 5 மணிவரை இந்த நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அப்பங்கள் அனைத்தும் சுவாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

- Advertisement -