- Advertisement -

நவகிரக பாதிப்பை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

நவகிரகங்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்தவராக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். இவர் பலசாலியாகவும், அதே சமயம் புத்திசாலியாகவும் இருக்கக்கூடியவர். இவரை நாம் வழிபடுவதன் மூலம் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் வீரத்தையும், தைரியத்தையும் வழங்கக்கூடியவராகவும் மன பயத்தை போக்கக்கூடியவராகவும் ஆஞ்சநேயர் திகழ்கிறார். மேலும் ஆஞ்சநேயரை நம்மால் இயன்ற அளவு மிகவும் எளிமையான முறையில் வழிபட்டாலும் அந்த வழிப்பாட்டிற்கு உடனே செவி சாவித்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக் கூடியவராக திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட்டால் நவகிரக பாதிப்பு நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நவகிரக பாதிப்பை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

சிறந்த ராம பக்தனாகவும், அதே சமயம் தாயின் மீது அதிக அளவு பாசம் வைத்தவர் ஆகவும் திகழக்கூடியவர்தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் இன்றளவும் சிரஞ்சீவியாக இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றும் எந்த இடத்தில் ராம நாமம் உச்சரிக்கப்படுகிறதோ அந்த இடத்திற்கு வந்து தன்னை மறந்து அவரும் ராம வழிபாட்டை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் காரியத்தடையில் இருக்கக் கூடிய அற்புதமான கடவுளாகவும் ஆஞ்சநேயர் திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் வீட்டில் வைத்தும் வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 21 நாட்கள் செய்ய வேண்டும் என்பதால் பெண்கள் அவர்களுக்கு உரிய தவிர்க்க முடியாத நாட்களை விட்டுவிட்டு மற்ற நாட்களில் இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்கலாம். இந்த வழிபாட்டிற்கு மொட்டு உடையாத நல்ல கிராம்பாக 21 கிராம்பு வேண்டும். இந்த கிராம்பை பூ கட்டுவது போல் சிவப்பு நிற நூலால் கட்ட வேண்டும். சிவப்பு நிற நூல் கிடைக்காத பட்சத்தில் வெள்ளை நிற நூலையும் பயன்படுத்தலாம். இப்படி மாலையாக கட்டிவிட்டு அருகில் இருக்கக் கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

இந்த மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவித்துவிட்டு ஆஞ்சநேயரை 21 முறை வலம் வர வேண்டும். ஆஞ்சநேயர் பெரிய அளவில் இருக்கிறார் என்னும் பட்சத்தில் அதற்கேற்றார் போல் கிராம்பின் எண்ணிக்கையை நாம் அதிகரித்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 21 என்று எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக 21 நாட்கள் ஆஞ்சநேயருக்கு கிராம்பு மாலை சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும் என்றும் நவகிரக பாதிப்பு நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அருகில் ஆஞ்சநேயரின் ஆலயம் இல்லை என்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் படத்திற்கு இந்த கிராம்பு மாலையை சாற்றி வழிபாடு செய்யலாம். முதல் நாள் சாட்சிய மாலையை மறுநாள் எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு புதிதாக மாலை சாட்சி வழிபாடு செய்யும். 21 நாட்கள் கழித்து இந்த கிராம்பு மாலையில் இருக்கக்கூடிய கிராம்பை வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக தினமும் அருந்துவது சிறப்பு. இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அசைவத்தை தவிர்த்து விரதத்தை அனுஷ்டிப்பது என்பது விரைவிலேயே நல்ல பலனை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே:நன்மைகள் நடைபெற பைரவர் வழிபாடு
பண ஈர்ப்பை அதிகரிக்க உதவக்கூடிய கிராம்பை வைத்து ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் ஆஞ்சநேயர் நம் வசமாகி நாம் வேண்டியவரத்தை தருவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -