- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநன்மைகள் நடைபெற பைரவர் வழிபாடு

நன்மைகள் நடைபெற பைரவர் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும், எதிரிகளின் தொல்லைகளையும், பயத்தையும் நீக்கக்கூடிய அற்புதமான கடவுளாக திகழக்கூடியவர் பைரவர். பொதுவாகவே பைரவரை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் பலரும் நினைத்து இருப்பார்கள். அஷ்டமி என்பது செல்வ வளத்தை அதிகரிப்பதற்கு உதவக்கூடிய ஒரு தினமாக கருதப்படுகிறது. அந்த தினத்தில் பைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய செல்வ செழிப்பு உயரும் என்றும் கூறப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் குறையும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த கிழமையில் பைரவரை வழிபாடு செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நன்மைகள் நடைபெற பைரவர் வழிபாடு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். அந்தப் பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு அந்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்வோம். காலபைரவரை பொருத்தவரை நாம் அவரை வணங்க ஆரம்பித்து விட்டாலே நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அவை படிப்படியாக நீங்கும் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருந்து நம்மை காப்பாற்றுவார் காலபைரவர்.

- Advertisement -

அப்படிப்பட்ட காலபைரவரை மேஷ ராசிக்காரர்களும், விருச்சிக ராசிக்காரர்களும் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும். மாலை நேரத்தில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்க கூடிய கால பைரவருக்கு சிவப்பு நிற துணியில் 27 மிளகு போட்டு மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காலபைரவருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வர அவர்களுக்கு நல்ல செல்வ வளம் பெருகும்.

- Advertisement -

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமை அன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பச்சைப் பயிரை சுண்டலாக தயார் செய்து பைரவருக்கு நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

கடக ராசிக்காரர்கள் திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கால பைரவருக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து சந்தன காப்பு அணிவித்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்க கூடிய கால பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்துவர அவர்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும்.

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காலபைரவருக்கு இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றி முல்லை மலர்களை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய கால பைரவர் ஆலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய சனியின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி மாதம் சனிக்கிழமை வழிபாடு
இந்த முறையில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்கு உரிய கிழமையில் பைரவரை வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்