- Advertisement -

நவராத்திரியில் ஏற்ற வேண்டிய அணையாதீபம்

- Advertisement -

எல்லோருக்கும் நவராத்திரியில் கொலு வைத்து வழிபாடு செய்வது என்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் ஒரு சில பேர் வீட்டில் இந்த வழக்கம் இருக்காது. வழக்கம் இல்லாதவர்கள் வீட்டில் கலசம் நிறுத்திக் கொலு வைக்க மாட்டார்கள். புதுசாக இந்த வழக்கத்தை நாம் துவங்கலாமா என்று கேட்டால், துவங்கலாம். ஆனால் அந்த வழக்கம் பாதியில் நிற்கக்கூடாது.

இந்த வருடம் கலசம் நிறுத்திக் கொலு வைத்தால், அடுத்தடுத்த வருடங்கள் அதை தடைபடாமல் அந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆசைக்காக ஒரு வருடம் கொலு வைப்பது, 1 வருடம் கொலு வைக்காமல் விடுவது என்று இருக்கக் கூடாது. இதுதான் சாஸ்திரம்.

- Advertisement -

சரி நீங்கள் உங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை. கொலு வைக்கக்கூடிய வழக்கம் உங்கள் வீட்டில் இல்லை. இருந்தாலும் அம்பிகையை கொண்டு வந்து எங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த ஒன்பது நாளும் அமர வைக்க வேண்டும். அவளின் பரிபூரண ஆசீர்வாதத்தை நாங்கள் பெற வேண்டும் என்றால் என்ன செய்வது.

நவராத்திரி நாளில் ஏற்ற வேண்டிய அணையா தீபம்

அணையா தீபம், அகண்ட தீபம் என்று சொல்லுவார்கள். அதை இந்த ஒன்பது நாட்களும் பூஜை அறையில் ஏற்றி வைத்தால், அந்த தீபச்சுடரில் அம்பாள் வந்து அமர்ந்து கொள்வாள். ஓரளவுக்கு பெருசாக இருக்கும் மண் அகல் விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி கொட்டி பரப்பி, அதன் மேலே வாங்கிய அகல் விளக்கை வைக்க வேண்டும்.

- Advertisement -

அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி கொஞ்சம் தடிமனான திரி எடுத்து போட்டு, இன்று மாலை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, துர்க்கை தேவியே, அம்பாளே, மகேஸ்வரியே, லட்சுமி தேவியே, சரஸ்வதி தேவியே, இந்த தீபத்தில் வந்து அமர்ந்து இந்த 9 நாட்களும் எங்களுடைய வீட்டுக்கு அருளாசி கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இந்த தீபத்தை ஏற்றி ஏதாவது ஒரு சுண்டல் நெய்வேத்தியம் வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தேவை என்றால் 5 சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் வைத்தும் உங்கள் வீட்டிற்கு அழைத்து கொடுக்கலாம். தவறு கிடையாது. இந்த அகண்ட தீப, அணையா தீப வழிபாட்டை மேற்கொண்டாலும், நீங்கள் நவராத்திரி கொலு வைத்து, கலசம் வைத்து வழிபாடு செய்த புண்ணியத்தையும் பலனும் பெற முடியும். ஆனால் இந்த தீபம் இன்று மாலை ஏற்றப்பட்டால், அது 9 நாட்களும் தொடர்ந்து உங்களுடைய வீட்டில் எரிய வேண்டும்.

- Advertisement -

அந்த தீபத்தை அணியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டும் உங்களுடைய கடமை. இரவு பகல் பாராது அந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வைத்து, வழிபாடு செய்தால் இந்த 9 நாட்களும் அந்த அம்பாள் உங்கள் வீட்டில் அமர்ந்து உங்களுக்கான அருளாசியை கொடுத்துக் கொண்டே இருப்பாள். தினமும் மாலை ஏதாவது ஒரு பிரசாதம் செய்து வைத்து அம்பிகையே வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வராக முகூர்த்த ரகசியம்

ஏனென்றால் அந்த தீபச்சுடர் உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாள். அவளை பட்டினி போடக்கூடாது. உங்களுக்கும் அம்பிகையை இந்த வருடம் வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், மேல் சொன்ன இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -