உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன், வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் துன்பங்கள் என்று அனைத்தும் விலகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பலருக்கும் எதுவும் நடக்காமல் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்
வராக முகூர்த்த ரகசியம்
எத்தனை கோவிலுக்கு சென்று எப்படி விரதம் இருந்து எப்படி தீபமேற்றி எப்படி வழிபட்டாலும் நாம் வைத்த கோரிக்கை நிறைவேறவில்லை என்று வருத்தப்படுபவர்கள் அதிலும் குறிப்பாக வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்குரிய ஒரு சூட்சுமமான வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒரு நாளில் மொத்தம் 30 முகூர்த்தங்கள் இருக்கின்றன. இதில் பலரும் அறிந்தது பிரம்ம முகூர்த்த நேரம் ஆன காலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி தான். இந்த முகூர்த்தங்களை பொறுத்து நாம் செய்யக்கூடிய வழிபாட்டின் பலனும் அமையும் என்று கூறப்படுகிறது. எப்படி பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எழுந்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல்தான் வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கென்று ஒரு முகூர்த்தம் இருக்கிறது. இந்த முகூர்த்தத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்தோம் என்றால் நாம் வேண்டிய அனைத்து வேண்டுதலையும் வாராகி அம்மன் நிறைவேற்றுவாள்.
பொதுவாக வாராஹி அம்மனை அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி, அஷ்டமி போன்ற திதிகளில் வழிபாடு செய்வோம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளிலும் வழிபாடு செய்வோம். இந்த முகூர்த்த வழிபாடு என்பது தினமும் நாம் மேற்கொள்ளக்கூடிய வழிபாடு ஆகும். இந்த முகூர்த்தத்தை வராக முகூர்த்தம் என்று கூறுவோம். இந்த முகூர்த்தம் தினமும் காலையில் 10 மணியிலிருந்து 10:48 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வராகி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்தால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.
10 மணி ஆன பிறகு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக அதற்கு மேல் ஒரு வாழை இலையை விரித்துக் கொள்ள வேண்டும். அந்த வாழை இலைக்கு மேல் குங்குமத்தை பரப்பி நம்முடைய மோதிர விரலால் “ரு” என்று எழுத வேண்டும். பிறகு ஒரு வாராகி அம்மனுக்கு என்று ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஊதுபத்தி பொருத்திவைத்து வாராகி அம்மனை மனதார வழிபாடு செய்ய வேண்டும். இந்த குங்குமம் அப்படியே தொடர்ச்சியாக 48 மணி நேரம் வாராகி அம்மனுக்கு முன்பாகவே இருக்கட்டும்.
48 மணி நேரம் கழித்த பிறகு இந்த குங்குமத்தை எடுத்து தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த குங்குமத்தை நம்முடைய நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலமும் எந்த வேண்டுதலை நினைத்து நாம் இந்த வழிபாட்டை செய்தோமோ அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. நாம் மட்டுமல்லாமல் நம் வீட்டில் இருக்கக் கூடிய அனைவருமே இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் வாராகி அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும், நாம் செல்லும் காரியங்களில் நமக்கு வெற்றிகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு
நாம் நினைத்த வேண்டுதல் நிறைவேறவும், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கவும் வராகி அம்மனை இந்த நேரத்தில் வழிபாடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.