- Advertisement -

நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் பஞ்சமி வழிபாடு

- Advertisement -

ஐப்பசி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது. ஐப்பசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வழிப்பாடும் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் 21ஆம் நாள் பஞ்சமி திதி வருகிறது. இது வாராகி அம்மனுக்குரிய திதியாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்தோம் என்றால் மற்ற மாதங்களில் வழிபாடு செய்வதை விட ஆயிரம் மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் பஞ்சமி வழிபாடு

நமக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ அந்த பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக பல தெய்வங்களை நாம் வழிபாடு செய்வதுண்டு. அந்த தெய்வங்களும் அதற்கேற்ற பலனை நமக்கு தருவார்கள். அந்த வகையில் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர் வாராகி அம்மன். வாராஹி அம்மனை பஞ்சமி திதியில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்று வாராஹி அம்மனுக்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு காலை 9:31 முதல் 10 15 வரையும், மாலை 4:45 மணி முதல் 5:45 மணி வரையும், மாலை 6:25 மணி முதல் 8 மணி வரையும், இரவு 8:10 மணி முதல் 9 20 வரையும் உகந்த நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரங்களில் எந்த நேரம் தங்களுக்கு வசதியான நேரமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம். ஐப்பசி மாத பஞ்சமி திதியில் வழிபாடு செய்பவர்கள் வராகி அம்மனுக்கு துளசி மாலை அல்லது விரலி மஞ்சள் மாலையை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும் .அன்றைய தினத்தில் வாராகி அம்மனுக்கு பச்சரிசி அல்லது எருமை தயிரால் செய்யப்பட்ட பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

இதோடு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தங்கம், வெள்ளி என்று இவை இரண்டில் எது இருக்கிறதோ அந்த நாணயத்தை வைக்கலாம். அப்படியே இவை இரண்டிலும் நாணயங்கள் இல்லை என்னும் பட்சத்தில் 11 என்ற எண்ணிக்கையில் ஐந்து ரூபாய் நாணயங்களை பரப்பி கொள்ள வேண்டும். அதற்கு மேல் சிறிது அட்சதையை தூவ வேண்டும். பிறகு அதற்கு மேல் பன்னீரை தெளித்து ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு வாராகி அம்மனுக்குரிய வஜ்ரகோசம் நாமங்களை உச்சரிக்க வேண்டும். இதோடு வாராகி அம்மனின் 12 திருநாமங்கள் இருக்கின்றன. அந்த நாமங்களையும் கூறி வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

12 நாமங்கள்

பஞ்சமி,
தண்டநாதா,
சங்கேதா,
சமயேச்வரி,
சமயசங்கேதா,
வாராஹி,
போத்ரிணி,
சிவா,
வார்த்தாளி,
மகாசேனா,
ஆக்ஞா சக்ரேச்வரி,
அரிக்னீ.

இதையும் படிக்கலாமே:

இந்த முறையில் பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை முழு மனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும், பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -