
நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்வது தான் அமாவாசை நாள். அந்த நாளில் நாம் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரங்கள் பல இருக்கின்றன. அந்த பரிகாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் கல் உப்பு பரிகாரம். இந்த கல்லுப்பு பரிகாரத்தை முறையாக யார் ஒருவர் அமாவாசை தினத்தன்று செய்கிறார்களோ அவர்களுக்கு நினைத்தது நினைத்தபடி அப்படியே நடக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கல்லுப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது என்று நம் அனைவருக்குமே தெரியும். மேலும் அது எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை தரக்கூடிய ஒன்று என்றும் பலரும் கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட கல் உப்பை வைத்து அமாவாசை தினத்தில் நாம் பலவிதமான பரிகாரங்களை செய்வதுண்டு. அதிலும் குறிப்பாக நினைத்தது நடக்க வேண்டும் என்றாலும் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்றாலும் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யலாம்.
இந்த பரிகாரத்தை அமாவாசை தினமான இன்று இரவு 7 மணிக்கு மேல் செய்ய வேண்டும். நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது சமையல் அறையிலோ அல்லது வரவேற்பரையிலோ இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்து நன்றாக மூடி நம்முடைய மாடியில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார நினைத்து மனதிற்குள்ளேயே கூறிக்கொண்டு இருக்க வேண்டும். பணம் தொடர்பான பிரச்சனைகள் என்றால் அந்த பிரச்சினைகள் தீர வேண்டும் என்றும் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி நாம் தொடர்ச்சியாக 10 லிருந்து 15 நிமிடம் கண்களை மூடி மனதார நம்முடைய வேண்டுதலை முன் வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து கல்லுப்பை எப்பொழுதும் வைக்கக்கூடிய இடத்தில் வைக்கலாம் அல்லது தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம். இந்த முறையில் நாம் அமாவாசை தினத்தன்று கல் உப்பை வைத்து பரிகாரம் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு நாம் நினைத்தது நடப்பதற்குரிய வழிகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:அமாவாசை அன்று செய்ய வேண்டிய எலுமிச்சை பரிகாரம்
எளிமையான இந்த கல்லுப்பு பரிகாரத்தை முழுமனதோடும் நம்பிக்கையோடும் அமாவாசை தினத்தன்று செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். மேலும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகளும் பண பிரச்சினைகளும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.