மேல்மலையனூர் அங்காளம்மன் துணை. இந்த அம்பாளை அமாவாசை அன்று வழிபாடு செய்தால் நம்மை பிடித்த துன்பங்கள், கண் திருஷ்டி, ஏவல் பில்லி, சூனியம் போன்ற பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் கூட சர்வ சாதாரணமாக விடுபடும். எல்லோராலும் இந்த அமாவாசை திதியில் மேல்மலையனூர் சென்று அங்கு இருக்கும் அங்காளம்மனை வழிபாடு செய்வது என்பது இயலாத காரியம். அதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது.
ஆகவே அமாவாசை வந்தால் வீட்டில் இருந்தபடியே இந்த அம்பாளை மனதில் நினைத்து, இந்த அம்பாளின் பெயரைச் சொல்லி எலுமிச்சம் பழத்தை வைத்து பின் சொல்லக்கூடிய முறையில் பரிகாரத்தை செய்தாலே போதும். உங்களுடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். கெட்ட சக்திகளிடம் உங்களுடைய குடும்பம் அகப்பட்டுக் கொள்ளாது. இன்றைய தினம் மேல்மலையனூர் அங்காளம்மன் நினைத்து செய்ய வேண்டிய அந்த பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
அமாவாசை பரிகாரம்
மூன்று எலுமிச்சம் பழம் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று எலுமிச்சம் பழத்தையும் பூஜை அறையில் வைத்து, உங்களுடைய உள்ளங்கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு, “ஓம் மேல் மலையனூர் அங்காளம்மன் துணை” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி விடுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி, நிலைவாசலின் இரண்டு பக்கத்தில் வைக்க வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தில் ஒரு பக்கம் குங்குமம், ஒரு பக்கம் மஞ்சள் தடவி நிலை வாசல் படியில் காவலுக்கு வைத்து விடுங்கள்.
மீதம் இரண்டு பழம் பூஜை அறையில் இருக்கும். அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதை குடும்பத்தில் இருப்பவர்களுடைய கண் திருஷ்டி கழிக்க பயன்படுத்த வேண்டும். குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து இந்த எலுமிச்சம் பழத்தை அவர்களை மூன்று முறை சுற்ற வேண்டும். இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இரக்கத்தோடு மூன்று முறை சுற்றி, எலுமிச்சம் பழத்தை நான்காக நறுக்கி, வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் நான்கு திசையிலும் தூக்கி தூர போட வேண்டும்.
இப்படி தூக்கி போடுவதற்கு உங்களுக்கு வசதி இல்லை என்றால், நான்கு துண்டுகளையும் ஒரு பேப்பரில் வைத்து மடித்து குப்பை தொட்டியில் போட்டு குப்பை தொட்டியை மறக்காமல் நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் வைத்து விடுங்கள். திருஷ்டி சுற்றிய பழத்தை இரவு வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளக் கூடாது. அது முக்கியமான விஷயம்.
மூன்றாவதாக இன்னொரு பழம் இருக்கும். அந்தப் பழத்தை நிலை வாசலுக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். அந்த பழத்துக்கு மேலே ஒரு கற்பூரத்தை வைத்து, உங்களுடைய வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும்.
வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்திற்கும் மேலே ஒரு கட்டி கற்பூரம் எரிந்து கொண்டிருக்கிறது. இதை அப்படியே உங்களுடைய வீட்டை மூன்று முறை மட்டும் சுற்றி, அந்த கற்பூரத்தை கீழே போட்டு விடுங்கள். கற்பூரம் எரிந்து முடியட்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை தரையில் வைத்து இடது காலால் நசுக்கி, பேப்பரில் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே தூக்கி தூர போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி கடாட்சத்தைப் பெற அமாவாசை வழிபாடு
இந்த மூன்று விஷயங்களை அமாவாசை அன்று தொடர்ந்து நீங்கள் அங்காள பரமேஸ்வரியை மனதில் நினைத்து செய்தாலே உங்களுடைய குடும்பத்திற்கு எந்த ஒரு கஷ்டமும் வராது. கண் திருஷ்டியால் பாதிப்பு ஏற்படாது. எதிர்பாராத உயிரிழப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் நிலையாக தங்குமம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.