- Advertisement -

நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றும் பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

பௌர்ணமி என்பது எப்படி சிவபெருமானின் வழிபாட்டிற்கு உகந்த தினமாக கருதப்படுகிறதோ, அதேபோல்தான் குலதெய்வ வழிபாட்டிற்கும் உகந்த தினமாக கருதப்படுகிறது. மேலும் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் பௌர்ணமி தினம் என்பது கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பௌர்ணமி தினம் என்பது இந்த ஐப்பசி மாதத்தில் வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமை என்பதால் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நமக்கு இரட்டிப்பு பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நம்முடைய நிறைவேறாத வேண்டுதல் நிறைவேறுவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பௌர்ணமி பரிகாரம்

எந்த ஒரு தெய்வத்தை வழிபட்டாலும் வழிபடாவிட்டாலும் குலதெய்வத்தை கண்டிப்பான முறையில் வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த தினமாக கருதப்படுவது தான் பௌர்ணமி தினம். இந்த பௌர்ணமி தினத்தில் குலதெய்வம் வீற்றிருக்கக் கூடிய வீட்டின் நிலை வாசலில் நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரமானது நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நிறைவேறாமல் இருந்த வேண்டுதலை நிறைவேற்றுவதோடு குலதெய்வ அருளையும் பரிபூரணமாக பெறச் செய்யும். அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை வைக்க வேண்டும். பிறகு ஒரு விரலி மஞ்சளையும், ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். பிறகு வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம், மலர்களை வைத்து, பிறகு இந்த முடிச்சை நிலை வாசலின் வலது புறத்தில் கட்டி விட வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் வெள்ளிக்கிழமை பூஜை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டும் பொழுது இந்த நிலை வாசலில் இருக்கக்கூடிய மூட்டைக்கும் காட்ட வேண்டும்.

அன்று முழுவதும் இந்த மூட்டை அப்படியே நிலை வாசலிலேயே இருக்கட்டும். அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக இந்த மூட்டையை எடுத்து அதில் இருக்கக்கூடிய அரிசியை எறும்புகள் இருக்கும் இடத்தில் தூவி விட வேண்டும். விரலி மஞ்சளை வீட்டில் இருக்கக்கூடிய வாராகி அம்மன், மாரியம்மன், மகாலட்சுமி போன்ற பெண் தெய்வ படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். நாணயத்தை பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று நாம் நிலை வாசலில் பரிகாரம் செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய நீண்ட நாள் வேண்டுதல்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:சொர்க்கம் கிடைக்க அன்னாபிஷேக தரிசனம்
இந்த எளிமையான பரிகாரத்தை முழுமனதோடு குலதெய்வத்தை நினைத்து செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும், வேண்டுதலும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -