சமையலறைக்கு தேவையான புத்தம் புது குறிப்புகள்

palli
- Advertisement -

தினமும் சமையலறையில் அதிகப்படியாக நேரத்தை கழிக்கும் இல்லத்தரசிகளுக்கு புத்தம் புது குறிப்புகள் தினம் தினம் தேவைப்படும். புதுப்புது ஐடியாக்களை அவர்கள் தெரிந்து கொள்ளும்போது அவர்களுடைய சமையலறை வேலை சுலபமாகும். இல்லத்தரசிகளுக்கு அவசியம் தேவைப்படக்கூடிய ஒரு சில வீட்டு குறிப்பு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்புகளைப் படித்து பாருங்கள். உங்களுக்கு தேவையான குறிப்புகளை நேரம் கிடைக்கும் போது ட்ரை பண்ணியும் பார்க்கலாம்.

Tip 1
இந்த வெயில் காலத்தில் கேரட்டை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தால் கூட சீக்கிரம் ஆங்காங்கே ஓட்டை விட்டு அழுகிப் போகின்றது. வாங்கிய கேரட்டை காம்பு பகுதியும் தோல் பகுதியும் வெட்டிவிட்டு, வெட்டிய அந்த இடத்தில் கொஞ்சமாக சமையல் எண்ணெயை தடவி பிறகு பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் எத்தனை நாள் ஆனாலும் அந்த கேரட் பிரஷ் ஆகவே அழுகி போகாமல் இருக்கும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இப்படி எந்த எண்ணெயை வேண்டும் என்றாலும் கேரட்டுக்கு இரண்டு பக்கத்திலும் தடவலாம்.

- Advertisement -

Tip 2
உங்க வீட்டு டீத்தூள் பாட்டிலில் கொஞ்சமாக சுக்கு பொடி, கொஞ்சமா ஏலக்காய் பொடியை போட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போது எந்த மூடில் டீ போட்டாலும் சரி, உங்கள் டீ கமகமன்னு வாசனையா சூப்பரா தான் இருக்கும். சொதப்பல் டீ போட வாய்ப்பே இருக்காது.

Tip 3
பச்சை மிளகாயிலிருந்து காம்பை எடுத்து இனி குப்பையில் தூக்கி போடாதீங்க. ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா எடுத்துக்கோங்க. அதில் தண்ணீரை ஊற்றுங்கள். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றினால் போதும். இந்த பச்சை மிளகாய் காம்பை அதில் போட்டு அப்படியே வைத்து விடுங்கள். 12 மணி நேரம் அந்த மிளகாய் காம்புகள் தண்ணீரிலேயே ஊறட்டும்.

- Advertisement -

பிறகு அந்த காம்புகளை எடுத்துவிட்டு இந்த தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் ஊற்றி, கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த ஸ்ப்ரேவை டியூப் லைட்டுக்கு கீழே அடித்தால், அந்த இடத்தில் அதிகமாக பல்லிகள், சின்ன சின்ன பூச்சிகள் தொல்லை வரவே வராது. இதே போல பீரோவுக்கு அடியில், சமையல் மேடைக்கு அடியில், எந்த இடத்தில் எல்லாம் உங்க வீட்டில் பல்லிகள் அதிகமாக வருமோ, அந்த இடத்தில் எல்லாம் இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்தி பாருங்கள்.

இது மட்டும் அல்லாமல் வீட்டின் சீலிங் பகுதியில் ஆங்காங்கே ஒட்டடை பிடித்து, சீக்கிரம் சிலந்தி பூச்சிகள் வரும். அந்த இடத்தில் எல்லாம் இந்த ஸ்ப்ரேவை அடித்து விட்டால் சிலந்தி பூச்சிகள் சீக்கிரம் கூடு கட்டாமலும் இருக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை இப்படி இந்த ஸ்பிரேவை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் வீடு சுத்தமாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: கெட்டித் தயிர் வீட்டிலே சுலபமாக செய்வது எப்படி?

Tip 4
வாங்கிய இஞ்சையும் மண்ணு போகும் அளவுக்கு நன்றாக கழுவி, உலர வைத்து விடுங்கள். பிறகு ஒரு காட்டன் துணி பையில் அந்த இஞ்சியை போட்டு சுருட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் இஞ்சி கெட்டுப் போகாமல் சூப்பராக இருக்கும்.

- Advertisement -