- Advertisement -

பண வரவை அதிகரிக்கும் பிரதோஷ தீப வழிபாடு

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு போதுமான அளவு பணவரவு என்பது ஏற்பட வேண்டும். அந்த பண வரவை பெறுவதற்காகத்தான் வேலைக்கு செல்கிறார்கள், தொழில் நடத்துகிறார்கள். இப்படி வேலைக்கு செல்வதாலும் தொழிலை நடத்துவதாலும் மட்டுமே பணவரவு என்பது ஏற்படாது. இதற்கு தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக வேண்டும். அப்படி தெய்வங்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு சனி மஹா பிரதோஷ நாளன்று ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரதோஷ தீப வழிபாடு

சிவபெருமானுக்கு உகந்த தினமாக கருதக்கூடிய பிரதோஷம் என்பது சனிக்கிழமையில் வரும் பொழுது அதற்கு அதீத சக்தி என்பது ஏற்படும். அப்படி அதீத சக்தி மிகுந்த சனி மகா பிரதோஷம் நாள் அன்று சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இவை நீங்கி விட்டாலே நம்மை தேடி நன்மைகள் உண்டாகும் அல்லவா? அதனால் நமக்கு இருக்கக்கூடிய பண தடையை நீக்கி பணவரவை அதிகரிப்பதற்கு சனி மஹா பிரதோஷ நாளில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் வீட்டில் ஏற்ற வேண்டும். ஒருவேளை அந்த நேரத்தில் ஏற்ற முடியவில்லை என்றால் மாலை 6:30 மணிக்கு மேல் இந்த தீபத்தை ஏற்றலாம். அன்றைய தினத்தில் எப்பொழுதும் போல் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். வீட்டில் வழிபாடு செய்வதாக இருந்தாலும் தங்களால் இயன்ற பிரசாதத்தை வைத்து வழிபாட்டை செய்யலாம்.

அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதாக இருந்தாலும் அவ்வாறு செய்து கொள்ளலாம். தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் அதீத பலனை பெற முடியும். பிரதோஷ வழிபாட்டை நிறைவு செய்த பிறகு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டில் மகாலட்சுமிக்கு உகந்த மருதாணி இலையை பரப்பிக் கொள்ள வேண்டும். வீட்டில் மருதாணி செடி இருக்கும் பட்சத்தில் எளிதில் மருதாணி இலைகள் கிடைத்துவிடும்.

- Advertisement -

ஒருவேளை மருதாணி செடி இல்லை என்றால் அருகில் இருப்பவர்களுடைய இல்லத்தில் இருந்து ஏதாவது ஒரு சிறிய தொகையை கொடுத்துவிட்டு வாங்கி வந்து ஏற்ற வேண்டும். அப்படி சிறிய தொகையை கொடுத்தால்தான் அந்த தீபத்திற்குரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு சிவபெருமானுக்கு முன்பாக தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் இவ்வளவு நேரம் தான் எரிய வேண்டும் என்று இல்லை என்பதால் தங்களால் இயன்ற அளவு சுத்தமான பசு நெய் ஊற்றி இந்த தீபத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு சிவபெருமானுக்குரிய மந்திரம் எது உங்களுக்கு தெரிகிறதோ அந்த மந்திரத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து கூற வேண்டும். இப்படி சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி சிவபெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் பொழுது சிவபெருமானின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய பணத்தடை அனைத்தும் விலகி பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:பிரச்சினைகளை தீர்க்கும் வாழைப்பழ பரிகாரம்

சனி மகா பிரதோஷ நாளன்று சிவபெருமானை முழுமனதோடு நினைத்து இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு பணத்தடைகள் விலகி பணவரவு அதிகரிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முழு மனதோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -