
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயார் ஆலமரத்தில் குடியிருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. அப்படிப்பட்ட ஆலமரத்தை வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாராக நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு எந்த முறையில் ஆலமரத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு தெய்வமும் ஒரு சூட்சுமமான வடிவத்தில் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த தெய்வத்தின் அம்சம் பொருத்திய பொருட்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்தையே வழிபாடு செய்வதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் மகாலட்சுமி தாயார் பல தெய்வீக பொருட்களில் வீற்றிருக்கிறார்கள் என்றும் அந்த தெய்வீக பொருட்களை முறையாக நாம் வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்குரிய உண்மையான பலன் கிடைக்கும் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் ஆலமரத்தை எந்த முறையில் வழிபாடு செய்தால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும் என்று தான் பார்க்க போகிறோம்.
ஆலமரத்தில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஆலமரத்தடிக்கு செல்ல வேண்டும். அந்த ஆலமரத்திற்கு தண்ணீரை ஊற்றி, அபிஷேகம் செய்து, மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து, தீபம் ஏற்ற வேண்டும். பிறகு தூபம் போட்டு ஆலமரத்திற்கு காட்டிவிட்டு பச்சரிசி, வெல்லம், சர்க்கரை, பச்சரிசி மாவு போன்றவற்றை ஆலமர இலையில் பிரசாதமாக வைத்து மகாலட்சுமி தாயாரை நினைத்து முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.
மகாலட்சுமி தாயாரின் மந்திரங்களோ, ஸ்தோத்திரங்களோ தெரியும் பட்சத்தில் அதை அங்கேயே அமர்ந்து கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு அந்த ஆலமரத்திடம் “உங்களுடைய விழுதை பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக மகாலட்சுமியின் அம்சமாக கருதி எடுத்துச் செல்கிறேன். எனக்கு நான் நினைத்தது போலவே பணவரவை தர வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொண்டு ஆலமர விழுதை மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் தங்களால் எத்தனை எடுக்க முடியுமோ அத்தனையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வர வேண்டும். பிறகு வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக எடுத்து வந்த ஆலமர விழுதை வைத்து விடுங்கள்.
மகாலட்சுமி தாயாருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த ஆலமர விழுதை ஒன்றாக சேர்த்து வைத்து மஞ்சள் நிற நூலால் மேலிருந்து கீழாக முழுவதுமாக சுற்ற வேண்டும். இப்படி சுற்றி முடித்த பிறகு இதை அப்படியே மறுபடியும் மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து விடுங்கள். ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை நிரப்பி அந்த பச்சரிசிக்குள் நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஆலமர விழுதை வைக்க வேண்டும்.. பிறகு அந்த பாட்டிலை அப்படியே மூடி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இப்படி நாம் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கப்பெறும். திடீரென்று ஏற்படும் பணத்தேவை பூர்த்தி அடையும். அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்குரிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் பணத்தை பெறுவதற்குரிய வழிகளும் நமக்கு கிடைக்கும். மேலும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர சிவ பூஜை
இந்த சூட்சுமமான வழிபாட்டு முறையை வெள்ளிக்கிழமை அன்று செய்து மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.