
இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அற்புதமான தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் சிவபெருமான். சிவபெருமானை வழிபட்டால் மறுபிறவி என்பதே இருக்காது. அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காகவோ வழிபட வேண்டும் என்றால் அவருடைய பஞ்சாட்சர மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக சிவபெருமானை வழிபடுபவர்கள் சிவபெருமானின் அருளை பெற வேண்டும் என்பதற்காக ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை உச்சரிப்பார்கள். இந்த மந்திரத்தை அனுதினமும் உச்சரிக்கும் நபர்களும் இருக்கிறார்கள். சிவபெருமானை வழிபடும் பொழுது மட்டும் உச்சரிக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம்முடைய மனமானது எதிலும் பற்று இல்லாமல் போய்விடும். இப்படி போய்விட்டால் குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. பணம் சேர்க்க வேண்டும், பொருள் சேர்க்க வேண்டும், குடும்பத்தை பார்க்க வேண்டும், குடும்பத்தாரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் ஏற்படாமல் சிவபெருமானே முக்கியமானவர் அவர் இன்றி வேறு எதுவும் இல்லை என்று அவரை மட்டுமே நினைத்து துறவறம் செய்யும் அளவிற்கு மணமானது பக்குவ நிலை அடையும்.
அதனால் துறவறம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சரி அப்பொழுது குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தீர வேண்டும், குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவனுடைய பஞ்சாச்சர மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?
சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரம் ஓம் நமசிவாய என்பதுதான். இந்த நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மசிவாயந சிவாயநம வாயநமசி யநமசிவா என்று பிரித்தும் கூறலாம். இப்படி ஒவ்வொரு பஞ்சாட்சர மந்திரத்தையும் கூறுவதற்கு என்று தனி வழிமுறைகள் இருக்கிறது. யார் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்ற நிபதனைகளும் இருக்கிறது.
இதில் பொதுவாக குடும்பத்தில் இருக்கும் நபர்கள் கூற வேண்டிய மந்திரம் சிவாய நம என்பதுதான். இந்த சிவாய நம மந்திரத்தை நாம் அனுதினமும் உச்சரிக்கும் பொழுது சிவ பெருமானின் அருளை பெறுவதோடு நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள்.
சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தின் பொருளை உணர்ந்து எதற்கு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதையும் அறிந்து உச்சரித்தோம் என்றால் நம் வாழ்வில் நாம் என்ன நினைக்கிறோமோ அதை நம்மால் செய்ய முடியும். இனிமேலும் குடும்பத்தில் இருக்கும் நபர்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நபர்கள் தயவுசெய்து ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை உச்சரிக்காமல், சிவாய நம என்னும் மந்திரத்தை உச்சரித்தால் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: வைகாசி முதல் நாள் செய்ய வேண்டிய முருகர் வழிபாடு
சிவபெருமான் மீது முழு நம்பிக்கை வைத்து சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை இந்த முறையில் உச்சரித்து குடும்பத்துடன் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் வாழலாம்.